Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 63 Verses

1 தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; [QBR] வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, [QBR] என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. [QBR]
2 இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, [QBR] உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். [QBR]
3 உயிரைவிட உமது கிருபை நல்லது; [QBR] என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். [QBR]
4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, [QBR] உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். [QBR]
5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; [QBR] என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். [QBR]
6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, [QBR] இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். [QBR]
7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், [QBR] உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். [QBR]
8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; [QBR] உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. [QBR]
9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, [QBR] பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். [QBR]
10 அவர்கள் வாளால் விழுவார்கள்; [QBR] நரிகளுக்கு இரையாவார்கள். [QBR]
11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; [QBR] தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் [QBR] அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; [QBR] பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். [PE]
×

Alert

×