Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 147 Verses

1 யெகோவாவை துதியுங்கள்; [QBR] நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, [QBR] துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. [QBR]
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; [QBR] துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். [QBR]
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், [QBR] அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். [QBR]
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, [QBR] அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். [QBR]
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; [QBR] அவருடைய அறிவு அளவில்லாதது. [QBR]
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; [QBR] துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். [QBR]
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; [QBR] நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். [QBR]
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, [QBR] பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, [QBR] மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். [QBR]
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். [QBR]
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; [QBR] வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். [QBR]
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் [QBR] யெகோவா பிரியமாக இருக்கிறார். [QBR]
12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; [QBR] சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. [QBR]
13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, [QBR] உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். [QBR]
14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, [QBR] செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். [QBR]
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; [QBR] அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. [QBR]
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; [QBR] சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். [QBR]
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; [QBR] அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; [QBR] தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். [QBR]
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், [QBR] இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். [QBR]
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; [QBR] அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். [QBR] அல்லேலூயா. [PE]
×

Alert

×