Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Proverbs Chapters

Proverbs 8 Verses

1 {ஞானம் அழைக்கிறது} [PS] ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? [QBR] புத்தி சத்தமிடுகிறதில்லையோ? [QBR]
2 அது வழியருகே உள்ள மேடைகளிலும், [QBR] நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. [QBR]
3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: [QBR]
4 மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR] என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். [QBR]
5 பேதைகளே, விவேகம் அடையுங்கள்; [QBR] மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். [QBR]
6 கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; [QBR] என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். [QBR]
7 என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், [QBR] ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. [QBR]
8 என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; [QBR] அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. [QBR]
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், [QBR] ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். [QBR]
10 வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், [QBR] சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். [QBR]
11 முத்துக்களைவிட ஞானமே நல்லது; [QBR] ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. [QBR]
12 ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, [QBR] நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். [QBR]
13 தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; [QBR] பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், [QBR] மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். [QBR]
14 ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; [QBR] நானே புத்தி, வல்லமை என்னுடையது. [QBR]
15 என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், [QBR] பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். [QBR]
16 என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், [QBR] பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். [QBR]
17 என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; [QBR] அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். [QBR]
18 செல்வமும், கனமும், நிலையான பொருளும், [QBR] நீதியும் என்னிடத்தில் உண்டு. [QBR]
19 பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; [QBR] சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. [QBR]
20 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், [QBR] அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், [QBR]
21 அவர்களை நீதியின் வழியிலும், [QBR] நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். [QBR]
22 யெகோவா தமது செயல்களுக்குமுன் [QBR] ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். [QBR]
23 பூமி உண்டாவதற்குமுன்னும், [QBR] ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். [QBR]
24 ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். [QBR]
25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், [QBR] குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், [QBR]
26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் [QBR] நான் உருவாக்கப்பட்டேன். [QBR]
27 அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; [QBR] அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், [QBR]
28 உயரத்தில் மேகங்களை அமைத்து, [QBR] சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், [QBR]
29 சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி [QBR] அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், [QBR]
30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; [QBR] எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, [QBR] எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன். [QBR]
31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, [QBR] மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். [QBR]
32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; [QBR] என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். [QBR]
33 நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; [QBR] அதைவிட்டு விலகாமல் இருங்கள். [QBR]
34 என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, [QBR] என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, [QBR] எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; [QBR] யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். [QBR]
36 எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, [QBR] தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; [QBR] என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது. [PE]
×

Alert

×