Indian Language Bible Word Collections
Job 5:26
Job Chapters
Job 5 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 5 Verses
1
|
“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? [QBR] பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? [QBR] |
2
|
கோபம் மூடனைக் கொல்லும்; [QBR] பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். [QBR] |
3
|
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு [QBR] உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். [QBR] |
4
|
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, [QBR] காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். [QBR] |
5
|
பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; [QBR] பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். [QBR] |
6
|
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; [QBR] வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. [QBR] |
7
|
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, [QBR] மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். [QBR] |
8
|
ஆனாலும் நான் தேவனை நாடி, [QBR] என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். [QBR] |
9
|
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத [QBR] அதிசயங்களையும் அவர் செய்கிறார். [QBR] |
10
|
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, [QBR] துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். [QBR] |
11
|
அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, [QBR] வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். [QBR] |
12
|
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, [QBR] அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார். [QBR] |
13
|
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; [QBR] தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும். [QBR] |
14
|
அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, [QBR] மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள். [QBR] |
15
|
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், [QBR] பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார். [QBR] |
16
|
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; [QBR] தீமையானது தன் வாயை மூடும். [QBR] |
17
|
இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; [QBR] ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். [QBR] |
18
|
அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; [QBR] அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. [QBR] |
19
|
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; [QBR] ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. [QBR] |
20
|
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், [QBR] போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். [QBR] |
21
|
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; [QBR] அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். [QBR] |
22
|
அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; [QBR] காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள். [QBR] |
23
|
வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; [QBR] வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். [QBR] |
24
|
உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; [QBR] உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது [QBR] குறைவைக் காணமாட்டீர். [QBR] |
25
|
உம்முடைய சந்ததி பெருகி, [QBR] உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். [QBR] |
26
|
தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, [QBR] முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். [QBR] |
27
|
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; [QBR] காரியம் இப்படியிருக்கிறது; [QBR] இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான். [PE] |