Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 40 Verses

1 பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக: [QBR]
2 “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? [QBR] தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். [QBR]
3 அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: [QBR]
4 இதோ, நான் எளியவன்; [QBR] நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; [QBR] என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். [QBR]
5 நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். [QBR]
6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார். [QBR]
7 இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; [QBR] நான் உன்னைக் கேட்பேன்; [QBR] நீ எனக்கு பதில் சொல். [QBR]
8 நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? [QBR] நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? [QBR]
9 தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? [QBR] அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? [QBR]
10 இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, [QBR] மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு, [QBR]
11 நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, [QBR] அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, [QBR]
12 பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, [QBR] அவனைப் பணியவைத்து, [QBR] துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. [QBR]
13 நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, [QBR] அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. [QBR]
14 அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி [QBR] நான் உன்னைப் புகழுவேன். [QBR]
15 இப்போதும் பிகெமோத்தை [* யானையை போன்ற பெரிய மிருகம்] நீ கவனித்துப்பார்; [QBR] உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; [QBR] அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். [QBR]
16 இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், [QBR] அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. [QBR]
17 அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; [QBR] அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. [QBR]
18 அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், [QBR] அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. [QBR]
19 அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, [QBR] அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். [QBR]
20 காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். [QBR]
21 அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், [QBR] சேற்றிலும் படுத்துக்கொள்ளும். [QBR]
22 தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும். [QBR]
23 இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; [QBR] யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். [QBR]
24 அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? [QBR] மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்? [PE]
×

Alert

×