Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 39 Verses

1 “வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? [QBR] மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? [QBR]
2 அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, [QBR] அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? [QBR]
3 அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, [QBR] தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். [QBR]
4 அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, [QBR] அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும். [QBR]
5 காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்? [QBR] அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? [QBR]
6 அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும், [QBR] உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன். [QBR]
7 அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, [QBR] ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை. [QBR]
8 அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, [QBR] எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும். [QBR]
9 காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? [QBR] அது உன் பண்ணையில் இரவு தங்குமோ? [QBR]
10 வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ? [QBR] அது உனக்கு இசைந்து போரடிக்குமோ? [QBR]
11 அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ? [QBR]
12 உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து, [QBR] உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? [QBR]
13 தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம், [QBR] நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ? [QBR]
14 அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், [QBR]
15 காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், [QBR] காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. [QBR]
16 அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல [QBR] அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; [QBR] அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும். [QBR]
17 தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல், [QBR] ஞானத்தை விலக்கிவைத்தார். [QBR]
18 அது இறக்கை விரித்து எழும்பும்போது, [QBR] குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும். [QBR]
19 குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? [QBR] அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? [QBR]
20 ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? [QBR] அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது. [QBR]
21 அது தரையிலே உதைத்து, [QBR] தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும். [QBR]
22 அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, [QBR] பயப்படுதலை புறக்கணிக்கும். [QBR]
23 அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது, [QBR]
24 கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து, [QBR] எக்காளத்தின் சத்தத்திற்கு பயப்படாமல் பாயும். [QBR]
25 எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; [QBR] யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், [QBR] சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும். [QBR]
26 உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, [QBR] தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ? [QBR]
27 உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, [QBR] உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? [QBR]
28 அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், [QBR] பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும். [QBR]
29 அங்கேயிருந்து இரையை நோக்கும்; [QBR] அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். [QBR]
30 அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; [QBR] பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார். [PE]
×

Alert

×