ஆட்கள் நடமாட்டம் நிறைந்து ஆரவாரம்செய்து, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டயத்தால் கொலை செய்யப்படவில்லை, போரில் இறந்ததும் இல்லை.
உன் அதிபதிகள் எல்லோரும் ஏகமாக ஓடி அலைந்தும், வில்வீரர்களால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட அனைவரும் தூரத்திற்கு ஓடியும் ஏகமாகக் கட்டப்படுகிறார்கள்.
இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு குளத்தை உண்டாக்குவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரச்செய்தவரைக் கவனிக்காமலும் போகிறீர்கள்.
மெய்யாகவே நீங்கள் சாகும்வரை இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறாரென்பது என் காது கேட்கும்படி சேனைகளின் யெகோவாவால் தெரிவிக்கப்பட்டது.
சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரண்மனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்திற்குப்போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
உயர்ந்த இடத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?
அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டிற்கு இகழ்ச்சியாக இருக்கும்.
உன் உடையை அவனுக்கு அணிவித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிமக்களுக்கும், யூதாவின் வம்சத்திற்கும் தகப்பனாயிருப்பான்.
உறுதியான இடத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்து விழும் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார்; யெகோவாவே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.