Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Nehemiah Chapters

Nehemiah 12 Verses

Bible Versions

Books

Nehemiah Chapters

Nehemiah 12 Verses

1 யூதா நாட்டிற்குத் திரும்பி வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் இவர்கள். அவர்கள் செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்தனர். இது தான் அவர்களின் பெயர் பட்டியல்: செராயா, எரேமியா, எஸ்றா,
2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 செகனியா, ரெகூம், மெரேமோத்,
4 இத்தோ, கிநேதோ, அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிப், யெதாயா,
7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா, ஆகியோர். இவர்கள் யெசுவாவின் காலத்தில் ஆசாரியருக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாயிருந்தார்கள்.
8 லேவியர்களானவர்கள்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா, என்பவர்கள். இவனும் மத்தனியாவின் உறவினர்கள் ஆகியோர் தேவனுக்குத் துதிப்பாடல்களைப் பாடும் பொறுப்புடையவர்களாக இருந்தார்கள்.
9 பக்புக்கியா, உன்னியும், லேவியர்களின் உறவினர்கள். அவர்கள் இருவரும் பணியில் அவர்களுக்கு எதிராக நின்றார்கள்.
10 யெசுவா யொயகீமின் தந்தை. யொயகீம் எலியாசிபின் தந்தை. எலியாசிப் யொயதாவின் தந்தை.
11 யொயதா யோனத்தானின் தந்தை. யோனத்தான் யதுவாவின் தந்தை.
12 யொயகீமின் காலத்திலே ஆசாரியர் குடும்பங்களின் தலைவர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். செரோயாவின் குடும்பத்தில் மெராயா தலைவன். எரேமியாவின் குடும்பத்தில் அனனியா தலைவன்.
13 எஸ்றாவின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன். அமரியாவின் குடும்பத்தில் யோகனான் தலைவன்.
14 மெலிகுவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன். செபனியாவின் குடும்பத்தில் யோசேப்பு தலைவன்.
15 அத்னா தலைவன். மெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன்.
16 இத்தோவின் குடும்பத்தில் சகரியா தலைவன். கிநெதோனின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன்.
17 அபியாவின் குடும்பத்தில் சிக்ரி தலைவன். மினியாமீன் மொவதியா என்பவர்களின் குடும்பங்களில் பில்தாய் தலைவன்.
18 பில்காவின் குடும்பத்தில் சம்முவா தலைவன். செமாயாவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன்.
19 யோயரிபின் குடும்பத்தில் மத்தனா தலைவன். யெதாயாவின் குடும்பத்தில் ஊசி தலைவன்.
20 சல்லாயின் குடும்பத்தில் கல்லாய் தலைவன். ஆமோக்கின் குடும்பத்தில் ஏபேர் தலைவன்.
21 இல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன். யெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர்.
22 எலியாசிப், யொயதா, யோகனான்,யதுவா, ஆகியோரின் காலங்களிலுள்ள லேவியர், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களின் பெயர்கள், பெர்சியா அரசன் தரியுவின் ஆட்சியின்போது எழுதப்பட்டன. பெர்சியனாகிய தரியுவின் இராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டனர்.
23 லேவியர்களாகிய சந்ததியின் தலைவன் எலியாசிபின் மகனாகிய யோகனானின் காலம் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24 இவர்கள் லேவியர்களின் தலைவர்கள். அசபியா, செரெபியா கத்மியேலின் மகனான யெசுவாவும் அவர்களின் சகோதரர்களும், அவர்களின் சகோதரர்கள் துதிப்பாட அவர்களுக்கு முன்னால் நின்று தேவனுக்கு மகிமைச் செலுத்தினார்கள். ஒரு குழு இன்னொரு குழுவிற்குப் பதில் சொன்னது. அதுதான் தேவமனிதனான தாவீதால் கட்டளையிடப்பட்டது.
25 வாசல்களுக்கு அடுத்துள்ள சேமிப்பு அறைகளைக் காத்து நின்ற வாசல் காவலாளர்கள்: மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்.
26 அவ்வாசல் காவலாளர்கள் யொயகீமின் காலத்தில் பணிச்செய்தனர். யொயகீம் யெசுவாவின் மகன். யெசுவா யோத்சதாக்கின் மகன். அந்த வாசல் காவலர்களும் நெகேமியா ஆளுநராயிருந்த காலத்திலும் ஆசாரியனும், வேதபாரகனுமான எஸ்றாவின் காலத்திலும் பணிச்செய்தனர்.
27 ஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர்.
28 [This verse may not be a part of this translation]
29 [This verse may not be a part of this translation]
30 ஆசாரியரும் லேவியரும் தங்களை ஒரு சடங்கில் சுத்தம்பண்ணிக்கொண்டனர். பிறகு அவர்கள் ஜனங்கள், வாசல்கள், எருசலேமின் சுவர் ஆகியவற்றை சடங்கில் சுத்தம்பண்ணினார்கள்.
31 நான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது பக்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள்.
32 ஒசாயாவும் யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள்.
33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் பின்தொடர்ந்துச் சென்றனர்.
35 ஆசாரியர்களில் சிலர் எக்காளங்களோடு சுவர் வரையிலும் பின்தொடர்ந்துச் சென்றனர். சகரியாவும் பின்தொடர்ந்து சென்றான். (சகரியா யோனத்தானின் மகன். அவன் செமாயாவின் மகன். அவன் மத்தனியாவின் மகன். அவன் மீகாயாவின் மகன். அவன் சக்கூரின் மகன். அவன் அஸ்பாவின் மகன்.)
36 அங்கே அஸ்பாவின் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் போனார்கள். அவர்களிடம் தேவமனிதனான தாவீது செய்த இசைக்கருவிகளும் இருந்தன. போதகனான எஸ்றா அந்த குழுவை நடத்திச் சென்று சுவரைப் பிரதிஷ்டை செய்யச் சென்றான்.
37 அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர்.
38 இரண்டாவது இசைக்குழு அடுத்தத் திசையில் இடதுபுறமாகச் சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் சுவரின் உச்சிக்குச் சென்றனர். ஜனங்களில் பாதிபேர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து அகல் சுவர் மட்டும் போனார்கள்.
39 பிறகு அவர்கள் எப்பிராயீம் வாசல், பழைய வாசல், மீன் வாசல், அனானெயேல் கோபுரம், நூறு கோபுரம் மற்றும் ஆட்டு வாசல் மட்டும் புறப்பட்டு காவல் வீட்டு வாசலில் நின்றார்கள்.
40 பிறகு இரு இசைக் குழுக்களும் தேவனுடைய ஆலயத்திலுள்ள தங்களது இடத்திற்குச் சென்றன. நான் எனது இடத்தில் நின்றேன். ஆலயத்தில் அதிகாரிகளில் பாதி பேர் தங்கள் இடங்களில் நின்றார்கள்.
41 பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர்.
42 பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர். பிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர்.
43 எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது.
44 அந்தநாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர்.
45 ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைகச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர்.
46 (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.)
47 எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

Nehemiah 12:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×