Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Isaiah Chapters

Isaiah 12 Verses

Bible Versions

Books

Isaiah Chapters

Isaiah 12 Verses

1 அப்போது நீ கூறுவாய், "கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் நீர் என் மீது கோபமாக இருந்தீர். ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! என் மீது உமது அன்பைக் காட்டும்".
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. அவர் என்னைக் காப்பாற்றுகிறார். கர்த்தராகிய யேகோவா எனது பெலம். அவர் என்னைக் காப்பாற்றுகிறார். நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்.
4 பிறகு நீ கூறுவாய்: "கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்! அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!"
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!.

Isaiah 12:3 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×