சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் இருக்கும் அர்ச்சகர்களையும், இன்னும் இறைவாக்கினர்களையும் கண்டு, "இத்தனை ஆண்டுகளாகச் செய்து வந்தது போல், ஐந்தாம் மாதத்தில் துக்கம் கொண்டாடி எங்களை ஒடுக்கிக் கொள்ள வேண்டுமோ?" என்று கேட்டு வரவும் அனுப்பினார்கள்.
இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் நீ கூற வேண்டியது இதுவே: இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து நீங்கள் துக்கம் கொண்டாடினீர்களே, எமக்காகவா நோன்பிருந்தீர்கள்?
யெருசலேமில் மக்கள் குடியேறிய பின் வளம் பெருகிய போது, அதனைச் சூழ்ந்திருந்த நகரங்கள், தென்னாடு, பள்ளச் சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், ஆண்டவர் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக முழங்கிய சொற்களும் இவையே அல்லவா?"
சேனைகளின் ஆண்டவர் தம் ஆவியால் ஏவி முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாய்த் தந்த திருச்சட்டத்தையும் வார்த்தைகளையும் கேட்டு விடாதபடி தங்கள் உள்ளத்தை வைரம் போலக் கடினமாக்கிக் கொண்டார்கள். ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கடுஞ்சினம் கொண்டார்.
ஆகவே, அவர்கள் முன்பின் அறியாத எல்லா மக்களினங்களின் நடுவில் சிதறச்செய்தோம்; இவ்வாறு, அவர்கள் விட்டுச் சென்ற நாடு பாழாயிற்று; அந்நாட்டில் போவான் வருவான் எவனுமே இல்லை; இன்ப நாட்டைப் பாழாக்கி விட்டார்கள்."