Indian Language Bible Word Collections
Matthew 15:6
Matthew Chapters
Matthew 15 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Matthew Chapters
Matthew 15 Verses
1
அப்பொழுது பரிசேயரும் மறைநூல் அறிஞரும் யெருசலேமிலிருந்து அவரிடம் வந்து,
2
"உம் சீடர், முன்னோர் பரம்பரையை மீறுவது ஏன் ? அவர்கள் உண்ணும்பொழுது கை கழுவுவதில்லையே" என்றனர்.
3
அவர் மறுமொழியாக அவர்களுக்குக் கூறியது: "நீங்களும் உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுள் கட்டளையை மீறுவது ஏன் ?
4
' உன் தாய் தந்தையரைப் போற்று ' என்றும், ' தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும் ' என்றும் கடவுள் கூறியுள்ளார்.
5
நீங்களோ, ' ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடியதெல்லாம் நேர்த்திக்கடனாயிற்று ' என்பானாகில்,
6
தன் தாய் தந்தையரைப் போற்றவேண்டியதில்லை என்று கூறிகிறீர்கள். இவ்வாறு உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிட்டீர்கள்.
7
வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றி இசையாஸ் சரியாய் இறைவாக்கு உரைத்திருக்கிறார்:
8
' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.
9
அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர் கற்பனை. ' "
10
பின்பு கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "நான் சொல்லுவதைக் கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள்.
11
வாய்க்குள் நுழைவது மனிதனை மாசுபடுத்துவதில்லை. வாயிலிருந்து வெளிவருவதே மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.
12
அப்போது, சீடர் அவரை அணுகி, "பரிசேயர் இவ்வார்த்தையைக் கேட்டு இடறல்பட்டது உமக்குத் தெரியுமா ?" என்றனர்.
13
அவரோ மறுமொழியாக, "என் வானகத்தந்தை நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
14
அவர்கள் இருக்கட்டும்; அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், இருவரும் குழியில் வீழ்வர்" என்றார்.
15
அதற்கு இராயப்பர், "இந்த உவமையை எங்களுக்கு விளக்கும்" என்றார்.
16
அவர் கூறியது: "உங்களுக்கு இன்னுமா உணர்வில்லை ?
17
வாயினுள் செல்வது எதுவும் வயிற்றிலே போய் ஒதுக்கிடமாய்க் கழிக்கப்படுகின்றது என்று நீங்கள் உணரவில்லையா ?
18
வாயினின்று வருபவை உள்ளத்தினின்று வருகின்றன, அவையே மனிதனை மாசுபடுத்துகின்றன.
19
ஏனெனில், உள்ளத்தினின்றே தீய எண்ணங்கள், கொலை, விபசாரம், மோகம், களவு, பொய்ச்சான்று, பழிச்சொல் ஆகியவை வெளிவரும்.
20
இவையே மனிதனை மாசுபடுத்துகின்றன. கை கழுவாது உண்ணுவதோ மனிதனை மாசுபடுத்துவதில்லை."
21
இயேசு அங்கிருந்து விலகி, தீர், சீதோன் நகரங்களின் பக்கம் சென்றார்.
22
இதோ! அங்கே வாழ்ந்த கனானேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து, "ஆண்டவரே, தாவீதின் மகனே! என்மேல் இரக்கம்வையும். என் மகள் பேய்பிடித்துப் பெரிதும் துன்புறுகிறாள்" என்று கூவினாள்.
23
அவர் ஒரு வார்த்தைகூடப் பதில்சொல்லவில்லை. சீடர் அவரை அணுகி, "இவள் நமக்குப்பின் கத்திக் கொண்டு வருகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று வேண்டினர்.
24
அதற்கு அவர், "இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
25
அவளோ வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்" என்றாள்.
26
அவர் மறுமொழியாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
27
அவளோ, "ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.
28
அப்போது இயேசு அவளுக்கு மறுமொழியாக, "அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார். அந்நேரமுதல் அவள்மகள் குணமாயிருந்தாள்.
29
இயேசு அங்கிருந்து சென்று, கலிலேயாக் கடற்கரைக்கு வந்து மலையில் ஏறி அங்கு அமர்ந்தார்.
30
மக்கள் திரள்திரளாக அணுகி, ஊமை, குருடர், முடவர், ஊனர் இன்னும் பலரையும் கொண்டுவந்து, அவரது காலடியில் வைக்க, அவர் அவர்களைக் குணமாக்கினார்.
31
எனவே, ஊமைகள் பேசுவதையும், ஊனமுடையோர் குணமடைவதையும், முடவர் நடப்பதையும், குருடர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியந்து இஸ்ராயேலின் கடவுளை மகிமைப்படுத்தினர்.
32
இயேசு தம் சீடரை அழைத்து, "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே. இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு விருப்பமில்லை. அனுப்பினால், வழியில் சோர்ந்து விழக்கூடும்" என்றார்.
33
சீடரோ, "இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு வயிறார உணவளிக்க இப்பாழ்வெளியில் அப்பங்கள் நமக்கு எங்கிருந்து கிடைக்கும் ?" என்றனர்.
34
இயேசு, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க, அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர்.
35
அப்போது அவர் தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டு,
36
ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டுத் தம் சீடரிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குக் கொடுத்தனர்.
37
எல்லாரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.
38
பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை நாலாயிரம்.
39
அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டுப் படகேறி மகதா நாட்டுக்கு வந்தார்.