அதன் கீழ் சுற்றிலும் எருதுகளின் உருவங்கள் இருந்தன. அதைச் சுற்றிலும் பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவை தொட்டியோடு ஒன்றாகவே வார்க்கப் பட்டிருந்தன.
அத்தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. எருதுகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. தொட்டியின் களம் ஒருச்சாண்.
ஊராம் செப்புப் பாத்திரங்களையும் சாம்பலை எடுக்கத்தக்க பெரிய முட்கரண்டிகளையும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு அரசர் செய்யச் சொல்லியிருந்த ஆலய வேலைகளை எல்லாம் அவன் செய்து முடித்தான்.
மாதுளம் பழங்களைப் போன்ற நானூறு குமிழ்கள், இரு வலைப்பின்னல்களுமாம். அவை ஒவ்வொன்றிலும் மாதுளம் பழங்கள் இரண்டு வரிசைகளில் வைக்கப் பட்டிருந்தன. வலைப் பின்னல்களோ தூண்களின் போதிகைகளையும் குமிழ்களையும் மூடியிருந்தன.
பெரிய முட்கரண்டிகள், கிண்ணங்கள் முதலியன. தந்தையைப் போன்று இருந்த ஊராம்- அபி ஆண்டவரின் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.
நறுமண எண்ணெய்ச் சிமிழ்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் சிறிய உரல்களையும் பசும் பொன்னால் செய்தார். உள்தூயகக் கதவுகளில் வேலைப்பாடுகளை அமைத்து, ஆலய வெளிவாயில்களைத் தங்கத்தால் செய்தார். இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் ஆலய வேலை முடிவுற்றது.