நான் அவனிடம், "எங்கே போய்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன். அவன் என்னிடம், "நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப் பார்க்கப் போகிறேன்" என்றான்.
சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!" சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். உன்னிடமிருந்து திருடிய ஜனங்களிடத்திற்கு என்னை அனுப்பினார். உங்களைக் கனப்படுத்தும்படி என்னை அனுப்பினார்.
பாபிலோனியர், என் ஜனங்களை அடிமைப்படுத்தினார்கள். ஆனால் நான் அவர்களைப் பலமாக அடிப்பேன்,அவர்கள் என் ஜனங்களின் அடிமைகளாவார்கள், பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அறிவார்கள்.
அந்த நேரத்தில், பல நாடுகளிலிருந்து ஜனங்கள் என்னிடம் வருவார்கள். அவர்கள் எனது ஜனங்களாவார்கள். நான் உங்கள் நகரில் வாழ்வேன்" பிறகு, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.