கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும். என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும். உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை. செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார். அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான். மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள். தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள். தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள். தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார். ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள். தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்! தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார். எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம், எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும் தேவன் எப்போதும் வாழ்கிறவர். அவர் என்றென்றும் வாழ்வார். எல்லா ஜனங்களும், “ஆமென்! கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.