யூதாவின் அரசனாகிய அமோன் என்பவனின் மகன் யோசியாஸ் காலத்தில், எசேக்கியாஸ் மகன் அமாரியாஸ், இவர் மகன் கொதோலியாஸ், இவர் புதல்வன் கூசி, இவர் மைந்தன் செப்போனியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு.
இறைவனாகிய ஆண்டவர் முன் மவுனமாயிருங்கள்! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; ஆண்டவர் பலியொன்றை ஏற்பாடு செய்து, தாம் அழைத்தவர்களை அர்ச்சித்திருக்கிறார்.
அக்காலத்தில், விளக்கேந்தி யெருசலேமை நாம் சோதித்துப் பார்ப்போம்: 'ஆண்டவர் நன்மையும் செய்யார், தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு வண்டல்கள் மேல் கிடக்கிற மனிதர்களைத் தண்டிப்போம்.
அவர்களுடைய உடைமைகள் சூறையாடப்படும், வீடுகள் தரைமட்டமாக்கப்படும்; அவர்கள் தங்களுக்கென வீடுகள் கட்டினாலும் அவற்றில் குடியிருந்து பார்க்கமாட்டார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடித்துப்பார்க்கமாட்டார்கள்."
ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அண்மையில் விரைந்து வந்து கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் இரைச்சல் மனக்கசப்பைத் தருகிறது, வீரனும் கலங்கி அலறுகிறான்.
வேதனையை மனிதர்கள் மேல் வரச்செய்வோம், குருடர்களைப் போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவர்க்கு எதிராகப் பாவஞ்செய்தனர்; அவர்களுடைய குருதி புழுதியைப் போலக் கொட்டப்படும், சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
ஆண்டவருடைய கோபத்தின் நாளிலே, அவர்களின் வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றமாட்டா; அவருடைய ஆத்திரத்தின் கோபத்தீயால் உலகமெலாம் அழிக்கப்படும்; மண்ணுலகின் குடிமக்கள் அனைவரையும் திடீரென முற்றிலும் அழித்துப் போடுவார்.
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, "இவை எதைக் குறிக்கின்றன?" என்று நான் வினவினேன். அதற்கு அவர், "இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள்" எனப் பதிலளித்தார்.
"இவர்கள் எதற்காக வருகிறார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அத்தூதர், "எவரும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே; யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன" என்று பதிலுரைத்தார்.