தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
அவற்றை வாங்குகிறவர்கள் அவற்றைக் கொல்லுகிறார்கள்; ஆயினும் அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை; அவற்றை விற்கிறவர்களோ, 'ஆண்டவர்க்குப் புகழ் உண்டாவதாக! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது' என்று சொல்லுகிறார்கள்; அவற்றின் சொந்த இடையர்களே அவற்றின் மீது இரக்கம் காட்டுகிறதில்லை.
இனி, இந்த நாட்டில் வாழ்கிறவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டமாட்டோம், என்கிறார் ஆண்டவர். இதோ, ஒவ்வொருவனையும் அவன் அயலானுடைய கையிலும், அரசனுடைய கையிலும் சிக்கும்படி, மனிதர்களை நாம் கையளிக்கப்போகிறோம்; அவர்கள் நாட்டைப் பாழ்படுத்துவார்கள்; அவர்கள் கையிலிருந்து யாரையும் நாம் தப்புவிக்கமாட்டோம்."
அவ்வாறே கொல்லப்படப்போகிற ஆடுகளை நான் ஆட்டு வணிகருக்காக மேய்க்கும் ஆயனானேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, 'பரிவு' என்று ஒன்றுக்கும், 'ஒன்றிப்பு' என்று மற்றதற்கும் பெயரிட்டேன்; ஆடுகளை மேய்த்து வந்தேன்.
ஆகையால், "உங்களை இனி நான் மேய்க்கப் போவதில்லை; சாகிறது சாகட்டும், அழிக்கப்படுவது அழிக்கப்படட்டும்; எஞ்சியிருப்பவை ஒன்றன் சதையை மற்றொன்று பிடுங்கித் தின்னட்டும்" என்று சொல்லி,
அப்போது நான் அவர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சரியென்றுபட்டால், எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையேல், வேண்டாம்" என்று சொன்னேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிப் பணங்களை நிறுத்தனர்.
ஆண்டவர் என்னைப் பார்த்து, "சிறந்த மதிப்பாக உன்னை மதிப்பிட்டு அவர்கள் கொடுத்த இப்பணத்தைக் கருவூலத்தில் எறிந்து விடு" என்றார். அவ்வாறே அந்த முப்பது வெள்ளிப் பணங்களை ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் போட்டு விட்டேன்.
ஏனெனில் இதோ, அழிந்து போவதைக் காப்பாற்றாதவனும், காணாமற் போனதைக் தேடாதவனும், காயம் பட்டதைக் குணமாக்காதவனும், நலமுடனிருப்பதை உண்பிக்காதவனும், ஆனால் கொழுத்தவற்றின் இறைச்சியைத் தின்பவனும், அவற்றின் குளம்புகளைக் கூடத் தறிப்பவனாகிய ஓர் இடையனை இந்த நாட்டில் தோன்றச் செய்வோம்.