தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.
உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது.
உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது.
வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன்.
காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.