நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும்.
அவர் சாவுக்குள்ளானார்; அந்தச் சாவு பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஒரே முறையில் எக்காலத்திற்கும் ஒழித்துவிட்ட சாவு அவர் வாழ்கிறார்; அந்த வாழ்வு கடவுளுக்காக வாழும் வாழ்வு
எவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாக உங்களைக் கையளிக்கிறீர்களோ, அவனுக்கு நீங்கள் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா ? சாவுக்கு உட்படுத்தும் பாவத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகள். இறைவனுக்கு ஏற்புடையவராக்கும் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டால், நீங்கள் அதற்கு அடிமைகள்.
ஆனால், முன்னே பாவத்தின் அடிமைகளாய் இருந்த நீங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்ட படிப்பினையின் ஒழுங்குக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிந்தீர்கள்; இதற்காகக் கடவுளுக்கு நன்றி.
நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.