வேறொருவருடைய வேலையாளைக் குறித்துத் தீர்ப்பிட நீ யார்? அவன் நிலையாய் நின்றாலும் தவறி விழுந்தாலும், அதைப்பற்றித் தீர்ப்பிடுவது அவனுடைய தலைவரே. ஆனால் அவன் நிலையாகத் தான் இருப்பான். ஏனெனில் ஆண்டவர் அவனை நிலைநிறுத்த வல்லவர்.
ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.
அப்படியிருக்க, நீ ஏன் உன் சகோதரனைக் குறித்துத் தீர்ப்பிடுகிறாய்? நீ உன் சகோதரனை ஏன் இழிவாகக் கருதுகிறாய்? நாம் அனைவரும் கடவுளின் நீதியிருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?
ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.
தன்னிலேயே எப்பொருளும் மாசுபட்டதன்று; ஆண்டவர் இயேசுவுக்குள் வாழும் எனக்கு இதைப்பற்றி ஐயமே இல்லை. ஆனால் ஒரு பொருள் மாசுபட்டது என ஒருவன் கருதினால், அது அவனுக்கு மாசுபட்டதாகும்.
நீ உண்ணும் உணவு உன் சகோதரன் மனத்தைப் புண்படுத்தினால், நீ அன்பு நெறியில் நடப்பவன் அல்ல. அற்ப உணவை முன்னிட்டு அவனை அழிவுறச் செய்யாதே; அவனுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்க வில்லையா?
உன் சகோதரனுக்கு யாவும் தீயவையே. உன் சகோதரனுக்கு இடைஞ்சலாயிருக்குமாயின், புலால் உண்பதையோ, மது குடிப்பதையோ அது போன்ற வேறெதையும் செய்வதையோ செய்யாமல் விடுவது நல்லது.
விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலை உனக்கிருந்தால், அதை உன்னோடு வைத்துக் கொள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும்., செய்வது நல்லதென முடிவு செய்த பின், அதைச் செய்யும் போது மனச்சாட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவன் பேறு பெற்றவன்.
நல்லதோ கெட்டதோ என்ற தயக்கத்தோடு ஒருவன் உண்பானாகில் அவன் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டான். ஏனெனில், அச்செயல் விசுவாசத்தால் வரும் உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.