ஆளும் அதிகாரம் கொண்டவர்களுக்கு எவனாயினும் அடங்கியிருப்பானாக. ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சி பீடங்களைக் கடவுளே நிறுவினார்.
ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்பவன் கடவுளின் நிறுவனத்தையே எதிர்த்து நிற்கிறான். அவ்வாறு எதிர்த்து நிற்பவர்கள், தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.
ஏனெனில் அவர்கள் உனக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பணியாளர்கள். ஆனால், நீ தீமை செய்தால், அஞ்சவேண்டியது தான். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் வீணாக இல்லை; தீமை செய்பவளைப் பழிவாங்கக் கடவுளால் குறிக்கப்பட்ட ஏவலர்கள் அவர்கள்; அவரது தண்டனையை அவன்மேல் வரச்செய்பவர்கள்.
ஏனெனில், 'விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, இச்சிக்காதே 'என்னும் கட்டளைகளும் வேறு எந்தக் கட்டளையும் 'உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீது அன்பு காட்டுவாயாக' என்னும் ஒரே கட்டளையில் சுருக்கமாய் அடங்கியுள்ளன.
இறுதிக்காலம் இதுவே என நீங்கள் அறிந்தவர்களாய் இப்படி நடந்து கொள்ளுங்கள்; விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்து விட்டது. ஏனெனில் நாம் விசுவசிக்கத் தொடங்கிய போது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.