இதுவே நீங்கள் செலுத்தவேண்டிய ஆன்மீக வழிபாடு. இவ்வுலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக. இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள். அப்போது எது நல்லது, எது உகந்தது, எது தலை சிறந்தது என உங்களுக்கு விளங்கும்.
எனக்கு அளிக்கப்பட்ட அருளை முன்னிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது: உங்களில் எவனும் தன்னைக் குறித்து, மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அறிவுக் கொவ்வாத முறையில் தன்னை மதியாமல், அவனவனுக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த விசுவாசத்தின் அளவுக்கேற்றபடி தன்னை மதித்துக் கொள்ளட்டும்.
ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு வரங்களைப் பெற்றுள்ளோம்: நாம் பெற்றது இறைவாக்கு வரமாயின், விசுவாசத்திற்கு இசைந்தவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
அன்புக்குரியவர்களே! நீங்களே பழி வாங்காதீர்கள், அதை இறைவனின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், ' பழிவாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன் என்கிறார் ஆண்டவர்' என்று எழுதியுள்ளது.
நீயோ ' உன் பகைவன் பசியாய் இருந்தால். அவன் பசியை ஆற்று; தாகமாய் இருந்தால் அவன் தாகத்தை தணி. ஏனெனில், இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்.'