கடவுளின் திரு அருட் செயல்முறையை அவர்கள் அறிந்து கொள்ளாமல், அருள் பெறுவதற்குத் தங்கள் முறையையே நிலைநாட்டத் தேடினார்கள்; ஆகவே கடவுளுடைய அருட் செயல்முறைக்குத் தங்களை உட்படுத்தவில்லை.
திருச்சட்டத்தால் ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆதல் பற்றி மோயீசன் எழுதும்போது, "திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவனே அவருக்கு ஏற்புடையவனாக வாழ்வான்" என்றார்.
ஆனால் விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவனாதல் பற்றி மறைநூலில் உள்ள சான்று பின்வருமாறு: ' வானகத்திற்கு ஏறுபவன் யார் என்று நீ மனத்தில் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை.' - அதாவது, கிறிஸ்துவைக் கீழே கொண்டுவருவதற்கு என்க - அல்லது
அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.
ஆனால் தாங்கள் விசுவசியாத ஒருவரை நோக்கி எவ்வாறு மன்றாடுவர்? தாங்கள் கேள்வியுறாத ஒருவரை எவ்வாறு விசுவசிப்பர்? அறிவிப்பவன் இல்லையெனில், எவ்வாறு கேள்வியுறுவர்?
ஆயினும் எல்லாருமே நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஏனெனில், இசையாஸ், " ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்?" என்று முறையிடுகிறார்.
ஆனால் ஒருவேளை அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்லமுடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ' அவர்கள் குரலொலி மண்ணுலகெங்கும் பரவிற்று, அவர்கள் வார்த்தை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று.
ஆனால், இஸ்ராயேல் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. முதற்கண், ' இனம் அல்லாத இனத்தின் மேல் நீங்கள் பொறாமைப்படச் செய்வேன், அறிவில்லாத மக்களைப் பார்த்து நீங்கள் எரிச்சல் கொள்ளச் செய்வேன் ' என்று மோயீசன் சொல்லுகிறார்.