Indian Language Bible Word Collections
Psalms 97:6
Psalms Chapters
Psalms 97 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 97 Verses
1
|
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: பூவுலகு களிகூர்வதாக! தீவுகள் எல்லாம் அகமகிழட்டும்! |
2
|
மேகமும் இருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணைக்கு அடிப்படை. |
3
|
அவருக்குமுன் செல்வது நெருப்பு: சுற்றிலுமுள்ள எதிரிகளை அது எரித்து விடுகிறது. |
4
|
அவர் விடுக்கும் மின்னல்கள் பூவுலகுக்கு ஒளி வீசும்: அதைக் கண்டு பூவுலகம் நடுங்குகிறது. |
5
|
பூவுலகனைத்தையும் ஆளும் ஆண்டவர் முன்னே, மலைகள் மெழுகு போல் உருகுகின்றன. |
6
|
வானங்கள் அவரது நீதியை எடுத்துரைக்கின்றன: உலக மக்களனைவரும் அவரது மகிமையைக் காண்கின்றனர். |
7
|
சிலைகளை வழிபடுவோர், அவற்றில் பெருமை கொள்வோர் யாவரும் அவற்றில் நாணம் அடைகின்றனர்; அவர் முன்னிலையில் தெய்வங்களெல்லாம் குப்புற விழுகின்றன. |
8
|
இதைக்கேட்டு, சீயோன் மகிழ்கின்றது: ஆண்டவரே, உமது தீர்ப்புகளை முன்னிட்டே யூதாவின் நகரங்கள் களிகூர்கின்றன. |
9
|
ஏனெனில் ஆண்டவரே, நீர் பூவுலகனைத்தையுமே ஆளும் உன்னதர்: தெய்வங்களனைத்திற்கும் மேலானவர். |
10
|
தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார். |
11
|
நீதிமானுக்கு ஒளி எழுகின்றது: நேரிய உள்ளத்தவர்க்கு மகிழ்ச்சி பிறக்கின்றது. |
12
|
நீதிமான்களே, ஆண்டவரை நினைந்து அகமகிழுங்கள்: அவரது திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள். |