Indian Language Bible Word Collections
Psalms 9:11
Psalms Chapters
Psalms 9 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 9 Verses
1
|
ஆண்டவரே, என் முழு உள்ளத்துடன் உம்மைப் புகழுவேன்: உம் வியத்தகு செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். |
2
|
உன்னதமானவரே, உம்மை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: உம் பெயருக்குப் புகழ் பாடுவேன். |
3
|
ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர். |
4
|
ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர். |
5
|
புற இனத்தாரை அதட்டினீர், தீயோரை அழித்துவிட்டீர்: அவர்களுடைய பெயரையே அடியோடு எடுத்துவிட்டீர். |
6
|
எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது. |
7
|
ஆண்டவரோ என்றும் தம் அரியணையில் அமர்ந்துள்ளார்: நீதி வழங்கத் தம் அரியணையை நிறுவியுள்ளார். |
8
|
அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார். |
9
|
ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அடைக்கலமாயிருப்பார்: இடுக்கண் நேரும் போதெல்லாம் ஏற்ற சரண் அவரே. |
10
|
உம் பெயரை அறிந்தோர் உம்மீது நம்பிக்கை கொள்வர்: உம்மைத் தேடுவோரை நீர் கைநெகிழ்வதில்லை, ஆண்டவரே. |
11
|
சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள். |
12
|
இரத்தப் பழிவாங்கும் அவர் அவர்களை நினைவில் கொண்டுள்ளார்: எளியோரின் கூக்குரலைக் கேட்க மறவார். |
13
|
ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும். |
14
|
அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன். |
15
|
புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன. |
16
|
ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான். |
17
|
பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக. |
18
|
ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது. |
19
|
ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும். |
20
|
ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும். |