Indian Language Bible Word Collections
Psalms 73:11
Psalms Chapters
Psalms 73 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 73 Verses
1
|
நேரிய மனத்தோர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவு நல்லவர்! |
2
|
என் பாதங்களோ தடுமாறலாயின. சறுக்கி விழப் போனேன். |
3
|
ஏனெனில், தீயவர்களைக் கண்டு, பாவிகளுக்கு வந்த வாழ்வைப் பார்த்துப் பொறாமையுற்றேன். |
4
|
அவர்களுக்கு வேதனை எதுவுமில்லை, அவர்கள் உடலோ செழுமையும் கொழுமையும் கொண்டுள்ளது. |
5
|
மனிதப் பிறவிகளுக்குள்ள இடுக்கண்கள் அவர்களுக்கு இல்லை: மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை. |
6
|
எனவே மணிமாலை போல் செருக்கு அவர்களை அணி செய்கிறது. வன்செயலே அவர்களுக்கு ஆடை போல் இருக்கிறது. |
7
|
அவர்கள் வன்னெஞ்சத்திலிருந்து எழுகிறது அக்கிரமம்: அவர்கள் மனதிலிருந்து மடமைகள் தோன்றுகின்றன |
8
|
நகைக்கின்றனர், அவர்கள் தீமையே பேசுகின்றனர். துன்புறுத்துவோம் என இறுமாப்புடன் அச்சுறுத்துகின்றனர். |
9
|
வானத்தையே தாக்குகின்றது அவர்களது வாய்ச்சொல். வையகத்தில் பரவுகின்றது அவர்களுடைய பேச்சு. |
10
|
என் மக்களும் அவர்கள் பால் திரும்புகின்றனர்: அவர்கள் செய்வதை எல்லாம் தண்ணீர் குடிப்பது போல் ஏற்றுக் கொள்ளுகின்றனர். |
11
|
எங்ஙனம் அறிவார் கடவுள்? நி15714அறிவென்பது உண்டா உன்னதருக்கு?" என்கின்றனர். |
12
|
இதோ பாவிகள், இத்தன்மையோர் மனக்குத்தலின்றி, தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். |
13
|
ஆகவே நான் குற்றமின்றி என் உள்ளத்தைக் காத்தது வீண் தானோ? மாசின்றி என் கைகளைக் கழுவியது பயனற்றதோ? |
14
|
ஏனெனில், எந்நாளும் நான் வேதனையுறுகிறேன் நாடோறும் துன்பத்திற்குள்ளாகிறேன். |
15
|
நானும் அவர்களைப் போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் வாய்மை தவறியவனாவேன். |
16
|
ஆகவே இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன், ஆனால் அது பெரிய புதிராயிருந்தது. |
17
|
கடவுளுடைய புனித தலத்தில் நான் நுழைந்ததும், அவர்களுடைய கதி என்ன என்று உணர்ந்தேன். |
18
|
உண்மையிலேயே நீர் அவர்களைச் சறுக்கலான இடத்தில் நிறுத்துகிறீர். பாதாளத்தில் அவர்களை விழச் செய்கிறீர். |
19
|
எவ்வளவு விரைவாக அவர்கள் விழுந்தொழிந்தனர்! பேரச்சத்துக்குள்ளாகி அவர்கள் எடுபட்டு மறைந்தனர்! |
20
|
விழித்தெழுபவனின் கனவு போல் அவர்களுக்கு ஆயிற்று. ஆண்டவரே, அப்படியே நீர் எழும் போது அவர்கள் வேடத்தைக் கலைத்து விடுவீர். |
21
|
என் மனம் கசப்புற்ற வேளையில், என் உள்ளம் குத்துண்ட போது, |
22
|
நான் அறியாமலிருந்தேன்; உணராமல் போனேன் மிருகத்தைப் போல் உம் முன்னிலையில் கிடந்தேன். |
23
|
எனினும். எந்நேரமும் நான் உம்மோடிருக்கிறேன். நீர் என் வலக் கரத்தைப் பிடித்துத் தாங்குகிறீர். |
24
|
உமது அறிவுத் திறனைக்கொண்டு என்னை வழி நடத்துவீர் இறுதியில் நான் உமது மகிமையில் பங்கடையச் செய்வீர். |
25
|
உம்மைத் தவிர எனக்கு வானுலகில் உள்ளவர் யார்? உம்மோடு நான் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பம் தருவது எதுவுமில்லையே! |
26
|
என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து. |
27
|
உம்மை விட்டு அகல்வோர் இதோ அழிந்தொழிவர். உமக்கு வஞ்சகம் செய்வோர் அனைவரையும் அழித்து விடுவீர். |
28
|
கடவுளுக்கருகில் வாழ்வது எனக்கு எவ்வளவோ நலம், ஆண்டவராகிய கடவுளிடம் அடைக்கலம் புகுவது எவ்வளவோ நலம். சீயோனின் வாயில்களில் உம் செயல்களனைத்தையும் நான் எடுத்துரைப்பேன். |