என் களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு என்னை அழைத்துச் செல்கின்றார்; எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார்: தம் திருப்பெயரின் பொருட்டு என்னைத் தம் நேரிய வழியில் செலுத்துகின்றார்.
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்; உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.