Indian Language Bible Word Collections
Psalms 115:1
Psalms Chapters
Psalms 115 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 115 Verses
1
|
(114:9) எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது. |
2
|
(114:10) அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்? |
3
|
(114:11) நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார். |
4
|
(114:12) அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே. |
5
|
(114:13) அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை. |
6
|
(114:14) செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை. |
7
|
(114:15) கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை. |
8
|
(114:16) அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே. |
9
|
(114:17) இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். |
10
|
(114:18) ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். |
11
|
(114:19) ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார். |
12
|
(114:20) ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார். |
13
|
(114:21) தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார். |
14
|
(114:22) ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார். |
15
|
(114:23) ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார். |
16
|
(114:24) விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார். |
17
|
(114:25) இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை. |
18
|
(114:26) உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம். |