Indian Language Bible Word Collections
Psalms 111:8
Psalms Chapters
Psalms 111 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 111 Verses
1
|
அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன். |
2
|
ஆண்டவருடைய செயல்கள் மகத்தானவை: அவற்றில் இன்பம் கொள்வோர் அவற்றை உய்த்துணர்வர். |
3
|
அவருடைய செயல் மகத்துவமும் மாண்பும் மிக்கது. அவருடைய நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. |
4
|
தம் வியத்தகு செயல்கள் என்றும் நினைவில் இருக்கச் செய்தார்: அன்பும் அருளும் மிக்கவர் ஆண்டவர். |
5
|
தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு ஊட்டினார்: தாம் செய்த உடன்படிக்கையை என்றும் மறவார். |
6
|
புறவினத்தாரைத் தம் மக்களுக்கு உரிமை யாக்கினார்: இவ்வாறு வல்லமை மிக்க தம் செயல்களைத் தம் மக்களுக்கு வெளிப்படுத்தினார். |
7
|
அவரது திருக்கரச் செயல்கள் நம்பிக்கைக்குரியவை, நேர்மையானவே: அவர் தரும் கட்டளைகள் நிலையானவை. |
8
|
என்றென்றும் நித்தியமும் நிலையாயுள்ளவை: உறுதியும் நேர்மையும் அவற்றின் அடிப்படை. |
9
|
தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கையை என்றென்றும் நிலைக்கச் செய்தார்: அவரது திருப்பெயர் புனிதமானது, வணங்குதற்குரியது. |
10
|
ஆண்டவர் மீதுள்ள அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவரை வழிபடுவோர் யாவரும் அறிவுள்ளவர்கள்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். |