Indian Language Bible Word Collections
Psalms 102:23
Psalms Chapters
Psalms 102 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 102 Verses
1
ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரல் உம்மிடம் வருவதாக.
2
இடுக்கண் உற்ற நாளில் உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதேயும்: என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்; உம்மைக் கூவியழைக்கும் போது விரைவாக என் வேண்டுதலைக் கேட்டருளும்.
3
ஏனெனில், என் வாழ்நாள் புகை போல் மறைகின்றது: என் எலும்புகள் நெருப்புப் போல் எரிகின்றன.
4
என் இதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலருகின்றது: உணவு உண்ணவும் நான் மறந்து போகிறேன்.
5
நான் வெகுவாய்ப் புலம்புகிறேன்: அதனால் என் எலும்புகள் தோலோடு ஒட்டிக் கொள்கின்றன.
6
பலைவனத்தில் இருக்கும் பெலிக்கானுக்கு நான் ஒப்பானேன்: பாழடைந்த இடத்தில் உலவும் ஆந்தை போலானேன்.
7
கூரைமீது, தனித்தமர்ந்த பறவைப் போல், தூக்கமின்றிப் புலம்புகின்றேன்.
8
என் எதிரிகள் என்னை எந்நேரமும் பழிக்கின்றனர்: என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கின்றனர்.
9
சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: நான் குடிக்கும் பானம் என் கண்ணீரோடு கலந்துள்ளது.
10
உமது வெகுளிக்கும் வெஞ்சினத்துக்குமுன் நடுங்குகின்றேன்: ஏனெனில் என்னை வெகுவாய் உயர்த்தினீர், பின்னர் தூக்கி எறிந்து விட்டீர்.
11
என்னுடைய வாழ்நாள் மாலை நிழலுக்கு ஒப்பாயிற்று: நானும் புல்லைப்போல் உலருகின்றேன்.
12
நீரோ ஆண்டவரே, என்றென்றும் நிலைத்துள்ளீர்: உமது பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
13
நீர் எழுந்து சீயோனுக்கு இரக்கம் காட்டும்: அதன் மீது இரக்கம் காட்ட காலம் வந்தது; இதோ ஏற்ற வேளை வந்துள்ளது.
14
அதன் கற்கள் மீது உம் ஊழியர் பற்றுக் கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துத் துயருகின்றனர்.
15
ஆண்டவரே, புற இனத்தார் உமது பெயரைக் கேட்டு அச்சம் கொள்வர்; மாநிலத்து அரசர்கள் அனைவரும் உமது மாட்சிமை கண்டு மருள்வர்.
16
ஆண்டவர் சீயோனை மீளவும் எழுப்பும் போது, நம் மாட்சிமையில் அவர் விளங்கும் போது,
17
எளியோர் செய்யும் செபத்தைத் தள்ளாமல் செவியேற்பார்: அவர்களுடைய வேண்டுதலைப் புறக்கணியார்.
18
பின் வரும் சந்ததிக்கென இதெல்லாம் எழுதப்படட்டும்: உருவாகி வரும் மக்கள் ஆண்டவரைப் புகழ்வார்களாக.
19
சிறைப்பட்டவர்களின் புலம்புதல்களைக் கேட்கவும், சாவுக்கனெ குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும்,
20
உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்: வானினின்று வையகத்தை நோக்கினார்.
21
இவ்வாறு ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் படி மக்களினங்கள். அரசுகள் அனைத்தும் ஒன்றாய்க் கூடும் போது,
22
ஆண்டவருடைய திருப்பெயர் சீயோனில் போற்றப்படும்: அவருடைய புகழ் யெருசலேமிலும் சாற்றப்படும்.
23
பாதி வழியில் என் பலத்தை எடுத்துவிட்டார்: என் வாழ்நாளைக் குறுக்கி விட்டார்.
24
நானோ வேண்டுதல் செய்தது: "என் இறைவா, என் வாழ்நாளின் பாதியில் என்னை எடுத்து விடாதீர்: உம் காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ!"
25
ஆதியிலே நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: வானங்கள் உம் கைவேலை.
26
(25b) இவையெல்லாம் அழிந்துவிடும், நீரோ நிலைநிற்பீர்: அனைத்துமே ஆடையைப் போல் பழமையடையும், துணிமணி போல் நீர் அவற்றை மாற்றுகிறீர்; அவையும் மாறிப்போம்.
27
(26) நீரோவெனில் ஒரே நிலையாய் உள்ளீர்: உம் காலத்துக்கு முடிவே இல்லை.
28
(27) உம் ஊழியரின் மக்கள் அச்சமின்றி வாழ்வார்கள்: அவர்கள் மக்கள் உம் முன்னே நிலைத்திடுவர்.