Indian Language Bible Word Collections
Psalms 10:18
Psalms Chapters
Psalms 10 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 10 Verses
1
ஆண்டவரே, ஏன் தொலைவிலுள்ளீர்? நெருக்கடியான வேளையில் ஏன் ஒளிந்து கொள்கிறீர்?
2
தீயோர் செருக்குற, எளியவரோ அவதிப்படுகிறார்கள்: அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் எளியோர் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்.
3
தன் தீய நாட்டத்தைப்பற்றி பாவியானவன் பெருமை கொள்கிறான்: பேராசைக்காரன் ஆண்டவரைப் பழிக்கிறான், புறக்கணிக்கிறான்.
4
கடவுளே இல்லை, எங்கே பழிவாங்கப்போகிறார்!" என்று தீயவன் செருக்குடன் சொல்கிறான்: இதுவே அவன் நினைவாயிருக்கிறது.
5
அவன் செய்யும் முயற்சிகள் எபபோதும் வெற்றிகரமாக முடிகின்றன: உம் தீர்ப்புகள் அவன் மனத்திற்குச் சிறிதும் எட்டாதவை; தன் எதிரிகளையெல்லாம் அவன் புறக்கணிக்கிறான்.
6
யாரும் என்னை அசைக்க முடியாது: தலைமுறை தலைமுறையாக நான் இன்பமாகவே வாழ்வேன்!" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
7
அவன் பேசுவதெல்லாம் சாபனையும் கபடமும் வஞ்சகமுமே: அவன் நாவில் ஒலிப்பது தீமையும் இன்னலுமே.
8
சிற்றூர்களுக்கருகில் கண்ணி வைத்துப் பதுங்கியிருப்பான், மறைவான இடங்களில் குற்றமற்றவர்களைக் கொலை செய்கிறான்: எளியவர்களுக்குத் தீமை செய்வதிலேயே அவன் கண்ணாயிருக்கிறான்.
9
புதரில் பதுங்கியிருக்கும் சிங்கம்போல அவன் மறைவாகப் பதுங்கிக்கிடந்து, எளியவரைப் பிடிக்கக் கண்ணி வைக்கிறான்: எளியோரைத் தன் வலையில் விழச்செய்து பிடித்துக்கொள்கிறான்.
10
எளியவர் மீது பாய்வதற்காகத் தரை மீது படுத்துப் பதுங்கிக்கிடக்கிறான்: அவனுடைய கொடுமையால் எளியோர் வீழ்ச்சியுறுகின்றனர்.
11
கடவுள் மறந்துவிட்டார், தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்: ஒருகாலும் பார்க்கமாட்டார்" என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
12
ஆண்டவராகிய இறைவா, எழுந்தருளும், உம் கரத்தை உயர்த்தும்: எளியோரை மறவாதேயும்.
13
கெட்டவர்கள் கடவுளைப் புறக்கணிப்பதேன்? "அவர் பழிவாங்க நினைக்கமாட்டார்" என்று தமக்குள் சொல்லிக் கொள்வதேன்?
14
ஆனால் ஆண்டவரே, நீர் எல்லாம் பார்க்கிறீர்! துன்புறுவோரையும் வேதனைப்படுவோரையும் நீர் கவனித்துக் கொள்கிறீர்: அவர்களை உம்மிடம் ஏற்றுக்கொள்கிறீர்; எளியவன் தன்னை உம்மிடம் ஒப்படைக்கிறான்; அநாதைக்கு நீரே துணை.
15
பாவிகள், தீமை செய்வோர் இவர்களுடைய பலத்தை நொறுக்கிவிடும்: இவர்களுடைய அக்கிரமத்திற்கேற்பப் பழிவாங்கும், அவ்வக்கிரமம் தொலைந்தே போகட்டும்.
16
ஆண்டவர் என்றென்றும் அரசராவார்: அவருடைய நாட்டினின்று புறவினத்தார் ஒழிந்துபோயினர்.
17
அநாதைகளுக்கும் அவதியுறுவோர்க்கும் நீதி வழங்கவும், உலகைச் சார்ந்த மனிதர் இனி அச்சம் விளைவிக்காதிருக்கவும்,
18
தாழ்வுற்றோருடைய மன்றாட்டை ஆண்டவரே, நீர் கேட்டருளினீர்: அவர்களுடைய உள்ளத்திற்கு ஊக்கமளித்து அவர்களுக்குச் செவிசாய்த்தீர்.