Indian Language Bible Word Collections
Proverbs 30:7
Proverbs Chapters
Proverbs 30 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 30 Verses
1
கக்குகின்றவனின் புதல்வனான சேகரிப்போனின் வார்த்தைகளாவன: கடவுள் தன்னுடன் இருக்க, தன்னோடு தங்கியிருக்கின்ற கடவுளால் திடப்படுத்தப்பட்ட மனிதன் உரைத்த காட்சி சொன்னதாவது:
2
நான் மனிதரில் மிகவும் மதிகேடனாய் இருக்கிறேன். மனிதருடைய ஞானம் என்னோடு இல்லை.
3
நான் ஞானத்தைக் கற்கவுமில்லை, நீதிமான்களின் அறிவுக் கலையை அறியவுமில்லை.
4
வான மண்டலத்தில் ஏறி இறங்கினவன் எவன் ? தன் கைகளில் காற்றை அடக்கினவன் எவன் ? ஆடையில் (கூட்டுவதுபோல்) நீர்த்திரளைக் கூட்டினவன் எவன் ? பூமியின் சகல எல்லைகளையும் எழுப்பி உறுதிப்படுத்தினவன் எவன் ? அவன் பெயர் என்ன ? அவன் மக்களின் பெயரும் என்ன, தெரியுமா ?
5
கடவுளின் வார்த்தை நெருப்பினால் (பரிசுத்தப்) பட்டது. அதை நம்பி இருக்கின்றவர்களுக்கு (அது) கேடயமாம்.
6
நீ கண்டிக்கப்பட்டுப் பொய்யனாய்ப் போகாதபடி அவருடைய வார்த்தைகளோடு யாதொன்றையும் சேர்க்காதே.
7
இரண்டு (காரியங்களை) நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறக்குமுன் (அவற்றை) நீர் எனக்கு மறுத்துவிடாதீர்.
8
வீணானதையும் பொய்யான சொற்களையும் என்னைவிட்டு அகன்றிருக்கச் செய்யும்; வறுமையையேனும் செல்வத்தையேனும் எனக்குக் கட்டளையிடாமல் என் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் எனக்குக் கொடும்.
9
(ஏனென்றால்), நான் ஒரு ஒருவேளை நிறைவினால் தூண்டப்பட்டு: ஆண்டவர் யார் என்று மறுத்துச் சொல்வேன்; அல்லது, வறுமையின் கொடுமையினால் திருடி, என் கடவுள் பெயரால் பொய்யாணை யிடுவேன்.
10
ஓர் அடிமையைப்பற்றி அவன் தலைவனிடம் குற்றம் சாட்டாதே. ஒருவேளை அவன் உன்னைத் தூற்றுவான்.
11
(தூற்றினால்) நீ அழிவாயன்றோ ? தன் தந்தையைத் தூற்றி, தாயை வாழ்த்தாத ஒரு சந்ததி உண்டு.
12
தன் கறைகளினின்று கழுவப்படாமலே தனக்குச் சுத்தமானதாகத் தோன்றுகின்ற ஒரு சந்ததி உண்டு.
13
தன் கண்களை நிமிர்த்தி வைத்து, தன் இமைகளை உயர எழுப்புகின்ற ஒரு சந்ததி உண்டு.
14
பூமியினின்று எளியவர்களையும் மனிதரினின்று ஏழைகளையும் விழுங்கும் பொருட்டு, தன் பற்களுக்குப் பதிலாய்க் கத்திகளை உடையதும் தன் கடைவாய்ப் பற்களால் அரைக்கிறதுமான ஒரு சந்ததி உண்டு.
15
அட்டைக்கு இரண்டு புதல்விகள் உண்டு. இவை, கொண்டு வா, கொண்டு வா என்கின்றன. நிறைவு அடையாதன மூன்று உண்டாம்; போதும் என்று சொல்ல அறியாத நான்காவதொன்றும் உண்டு.
16
அவை எவையென்றால்: பாதாளமும், யோனிவாயும், தண்ணீரால் நிறைவு அடையாத பூமியுமாம்; நெருப்போ, போதும் என்று ஒருகாலும் சொல்வதில்லை.
17
தன் தந்தையையும் இகழ்ந்து தன் தாயின் பிரசவ வேதனைகளையும் புறக்கணிக்கிறவனின் கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவுங் கடவன.
18
எனக்குக் கடினமானவை மூன்று உண்டு; நான்காவதையோ சிறிதேனும் அறியேன்.
19
வானவெளியில் கழுகின் வழியையும், பாறையின்மேல் பாம்பின் வழியையும், நடுக்கடலில் மரக்கலத்தின் வழியையும் (அறிவது கடினம்); இளமையில் மனிதன் வழியையும் (அறியேன்).
20
தின்றபின் தன் வாயைத் துடைத்துக் கொண்டு: நான் தீவினை செய்யவில்லை என்கிற விபசாரப் பெண்ணின் வழியும் அதற்குச் சமானம்.
21
பூமி மூன்றினால் குலைக்கப் படுகின்றது; நான்காவதையோ அது தாங்க மாட்டாது.
22
அரசாள்கின்ற அடிமையாலும், அப்பத்தால் நிறைவு கொண்டிருக்கின்ற மதிகேடனாலும்,
23
திருமணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பகைக்குரிய பெண்ணாலும் (பூமி குலைக்கப்படுகிறது); தன் தலைவியின் உரிமைக்காரியாகின்ற அடிமையையோ (அது) தாளமாட்டாது.
24
பூமியில் அற்பமானவை நான்கு உண்டு. ஆனால் அவையே ஞானிகளிலும் அதிக ஞானமுள்ளவை.
25
(அவை: ) அறுவடைக் காலத்தில் தமக்கு உணவைச் சேகரிக்கின்ற அற்பப் பொருளாகிய எறும்புகளும்,
26
பாறையின்மேல் தன் படுக்கையை அமைக்கின்ற பலமற்ற பிராணியாகிய முயற் குட்டியும்,
27
அரசனில்லாமலே அனைத்தும் கூட்டம் கூட்டமாய்ப் புறப்படுகின்ற வெட்டுக்கிளியும்,
28
கையால் பிடிக்கக் கூடுமானதும், அரசனுடைய வீடுகளிலுமே வாழ்ந்திருப்பதுமான பல்லியுமாம்.
29
நன்றாய் நடக்கிற மூன்றும், பாக்கியமாய் நடக்கிற நான்காவதொன்றும் உண்டு.
30
யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாத மிருகங்களில் மிக வலிமையுள்ள சிங்கமும்,
31
இடைக் கட்டப்பட்ட சேவலும், செம்மறிக்கிடாயும், எவரும் எதிர்க்கக்கூடாத அரசனுமாம்.
32
மேன்மையாய் உயர்த்தப்பட்டபின் மதியீனனாய்க் காணப்பட்டவன் உண்டு. ஏனென்றால், அவன் அறிவுடையவனாய் இருந்திருப்பானாயின் தன் வாயில் கை வைத்திருப்பான்.
33
பால் கறக்கும்படி மடியைப் பலமாய் அமுக்குகிறவன் வெண்ணெயைப் பிழிகிறான்; வலுவந்தமாய் மூக்கைச் சிந்துகிறவன் இரத்தத்தை வருவிக்கிறான்; கோபத்தை மூட்டுகிறவனோ பிளவுகளை விளைவிக்கிறான்.