Indian Language Bible Word Collections
Proverbs 3:29
Proverbs Chapters
Proverbs 3 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 3 Verses
1
|
என் மகனே, என் சட்டத்தை மறக்க வேண்டாம்; என் கட்டளைகளையும் உன் இதயத்தில் காப்பாயாக. |
2
|
ஏனென்றால், அவை உனக்கு நீடிய ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் சமாதானத்தையும் தரும். |
3
|
இரக்கமும் உண்மையும் உன்னை விட்டு அகலாதிருக்கட்டும். அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடுவாய்; உன் இதயத்தில் அவற்றைப் பதிய வைப்பாய். |
4
|
அப்போது நீ கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக அருளையும் நல்லறிவையும் கண்டடைவாய். |
5
|
நீ உன் விவேகத்திலேயே ஊன்றி நில்லாமல், உன் முழு இதயத்துடனே ஆண்டவர்மேல் நம்பிக்கை வை. |
6
|
உன் வழிகள் அனைவற்றிலும் அவரை நினைப்பாயாகில், அவர் உன்னை வழி நடத்துவார். |
7
|
உனக்கு நீயே ஞானியாய் இராதே. கடவுளுக்குப் பயந்து தீமையினின்று விலகு. |
8
|
அப்பொழுது நீ உடல் நலனுடன் இருப்பாய். உன் எலும்புகளும் நன்னீரால் நிறைக்கப்படும். |
9
|
உன் சொத்தைக் கொண்டு ஆண்டவரை வணங்கு. உன் எல்லா விளைவுகளின் முதற்பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு. |
10
|
அப்போது உன் களஞ்சியங்கள் தானியத்தால் நிறையும். உன் கொடி முந்தரிப் பழ ஆலைகளும் சாற்றால் நிரப்பப்படும். |
11
|
ஆண்டவருடைய கண்டனத்தை, என் மகனே, நீ தள்ளிவிடாதே. அவரால் கண்டிக்கப்படுகையிலும் சோர்ந்து போகாதே. |
12
|
ஏனென்றால், ஆண்டவர் தாம் நேசிப்பவனைக் கண்டிக்கிறார். தந்தை தன் மகனைப்பற்றி மகிழ்வதுபோல் அவரும் மகிழ்கிறார். |
13
|
ஞானத்தைக் கண்டுபிடித்து விவேகத்தால் நிறைந்திருக்கும் மனிதனே பேறு பெற்றவன். |
14
|
அதன் நற்பயன் வெள்ளி வியாபாரத்தைக் காட்டிலும், அதன் கனிகள் முதல் தரமான தூய தங்கத்தைக் காட்டிலும் மேம்பட்டனவாம். |
15
|
(ஞானம்) சொத்துகள் அனைத்திலும் அதிக விலையுள்ளது. விரும்பத் தக்கவையெல்லாம் அதற்கு இணைகூறத் தக்கனவல்ல. |
16
|
அதன் வலப்பக்கத்தில் நாட்களின் நீட்சியும், இடப்பக்கத்தில் செல்வமும் மகிமையும் உண்டு. |
17
|
அதன் வழிகள் அழகானவையும், அதன் அடிச்சுவடுகளெல்லாம் சமாதானமானவையுமாம். |
18
|
தன்னைக் கைக்கொள்பவர்களுக்கு அது வாழ்வு தரும் மரமாம். அதைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் பேறு பெற்றவன். |
19
|
ஆண்டவர் ஞானத்தால் உலகிற்கு அடித்தளமிட்டு, விவேகத்தால் வானங்களை நிறுவினார். |
20
|
(ஏனென்றால்) கடலினின்று நீர்த்தாரைகள் கிளம்புவதும், நீராவிகள் மேகங்களாகிப் பனியைப் பொழிவதும் அவருடைய ஞானத்தாலேயே. |
21
|
என் மகனே, இவை உன் கண்களினின்று மறையாதிருக்க நீ கட்டளையையும் ஆலோசனையையும் கைக்கொண்டு நிறைவேற்று. |
22
|
அவை உன் ஆன்மாவுக்கு உயிராகவும், உன் கழுத்திற்கு அணியாகவும் இருக்கும். |
23
|
அப்போது நீ நம்பிக்கையுடன் உன் வழியில் நடப்பாய்; உன் காலும் இடறமாட்டாது. |
24
|
நீ உறங்கும்போது பயப்பட மாட்டாய்; இளைப்பாறுவாய். உன் உறக்கம் இன்பமாய் இருக்குமேயன்றி, |
25
|
திடீர்ப் பயங்கரத்தாலும் உன்மேல் தாக்கும் தீயோருடைய வலிமையாலும் நீ பயப்பட மாட்டாய். |
26
|
ஏனென்றால் ஆண்டவர் உன் பக்கத்தில் இருப்பார். அவரே நீ சிக்கிக் கொள்ளாதபடி உன்னைக் காப்பார். |
27
|
நன்மை புரிய முயல்கிறவனை நீ விலக்காதே. உன்னால் இயலுமானால், நீயும் நன்மை செய். |
28
|
நீ அந்நேரமே தருமம் செய்யக் கூடியவனாய் இருக்கையில், போய்த் திரும்பி வா; உனக்கு நாளை தருவேன் என்று உன் நண்பனுக்குச் சொல்லாதே. |
29
|
உன்பால் தன் நம்பிக்கையை வைத்திருக்கும் நண்பனுக்குத் தீமை புரியக் கருதாதே. |
30
|
ஒருவன் உனக்கு யாதொரு தீங்கும் புதியாதிருக்கையில், அம் மனிதனுக்கு விரோதமாய் வீணே வழக்காடாதே. |
31
|
அநீதனைக் கண்டுபாவியாதே. அவன் வழிகளையும் பின்பற்றாதே. |
32
|
ஏனென்றால், சூதுள்ளவன் எவனோ அவன் ஆண்டவருக்கு அருவருப்பாய் இருக்கிறான். நேர்மையாளரோடுதான் அவர் உரையாடுவார். |
33
|
அக்கிரமியின் வீட்டிற்கு அவர் வறுமையை அனுப்புவார். நீதிமான்களின் உறைவிடங்களை ஆசீர்வதிப்பார். |
34
|
கபடமுள்ளோரைப் புறக்கணித்து, சாந்தமுடையோர்க்குத் (தம்முடைய) அருளைத் தந்தருள்வார். |
35
|
ஞானிகள் மகிமை பெறுவார்கள். அறிவிலிகளின் உயர்வோ இழிவேயாம். |