Indian Language Bible Word Collections
Proverbs 29:15
Proverbs Chapters
Proverbs 29 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 29 Verses
1
|
தன்னைத் திருத்துகிறவனை இகழும் பிடிவாதக்காரன்மீது திடீர் அழிவு வந்து சேரும். நலமும் அவனைத் தொடரமாட்டாது. |
2
|
நீதிமான்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் குடிகள் மகிழ்வார்கள். அக்கிரமிகள் ஆட்சியைக் கைப்பற்றுகையில் மக்கள் புலம்பி அழுவார்கள். |
3
|
ஞானத்தை நேசிக்கும் மனிதன் தன் தந்தையை மகிழச் செய்கிறான். வேசிகளைப் பேணுகிறவனோ தன் பொருளை இழப்பான். |
4
|
நீதியுள்ள அரசன் நாட்டைச் செழிப்பிக்கிறான். பேராசை சொண்ட அரசன் அதை நாசமாக்குகிறான். |
5
|
தன் நண்பனுக்கு இச்சகமும் கபடமுமுள்ள வார்த்தைகளை எவன் பேசுகிறானோ, அவன் அவனுடைய கால்களுக்கு வலையையே விரிக்கிறான். |
6
|
பாவம் செய்கின்ற அக்கிரமியான மனிதன் பாவ வலையிலேயே சிக்கிக் கொள்வான். நீதிமானோ இன்புற்று மகிழ்வான். |
7
|
நீதிமான் ஏழைகளின் நிலைமையை அறிகிறான். அக்கிரமி அதை அறியான். |
8
|
கேடு கெட்ட மனிதர்கள் நகரத்தைக் குலைக்கிறார்கள். ஞானிகளோ கோப வெறியை அகற்றுகிறார்கள். |
9
|
ஞானி மதியீனனுடன் விவாதிக்கையில், கோபித்தாலும் நகைத்தாலும் அவர்கள் (இருவரும்) உடன்பட மாட்டார்கள். |
10
|
இரத்த வெறியுள்ள மனிதர் நேர்மையாளனைப் பகைப்பர். நீதிமான்களோ அவனுடைய உயிரைக் (காப்பாற்றத்) தேடுகிறார்கள். |
11
|
மதி கெட்டவன் தன் திறமையையெல்லாம் வெளிக்காட்டுகிறான். ஞானி மதிப்பைத் தேடாமல் அதை மறைக்கிறான். |
12
|
பொய் வார்த்தைகளை மனம் விரும்பிக் கேட்கிற அரசன் (தன்) ஊழியர்கள் அனைவரையும் தீயோரென்று எண்ணுகிறான். |
13
|
ஏழையும் கடன்காரனும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டனர். இருவரையும் ஒளிரச் செய்பவர் ஆண்டவரே. |
14
|
ஏழைகளை உண்மையின்படி தீர்ப்பிடுகின்ற அரசனின் அரியணை என்றும் நிலைபெறும். |
15
|
பிரம்பும் கண்டனமும் ஞானத்தைத் தருகின்றன. தன் மனம்போல் விடப்படுகிற பையனோ தன் தாயை அவமதிக்கிறான். |
16
|
அக்கிரமிகள் பெருக, அக்கிரமங்களும் பெருகும். நீதிமான்களோ அவர்களுக்கு வரப்போகும் அழிவைக் காண்பார்கள். |
17
|
உன் மகனை (அறநெறியில்) படிப்பித்தால், அவன் உனக்கு ஆறுதலாய் இருப்பான்; உன் ஆன்மாவுக்கும் இன்பத்தைத் தருவான். |
18
|
இறைவாக்கு அற்றுப் போகையில் குடிகள் நிலைகுலைந்து போவார்கள். ஆனால், கடவுளின் கட்டளையைக் கைக்கொண்டொழுகுகிறவன் பேறு பெற்றவனாம். |
19
|
அடிமையை வார்த்தைகளால் கண்டிக்கக் கூடாது. ஏனென்றால், அவன் நீ சொல்வதைக் கண்டுபிடித்தாலும் மறுமொழி சொல்லத் தயங்குவான். |
20
|
பேசத் துடிக்கும் மனிதனைக் கண்டாயோ ? அவனுடைய திருந்துதலைவிட மதியீனத்தையே அதிகமாய் நம்ப வேண்டும். |
21
|
இளமை தொட்டு அடிமையைச் செல்லமுடன் பேணுகிறவன் பிற்காலத்தில் அவன் அவமதிப்பவன் என்று கண்டறிவான். |
22
|
கோபம் கொள்ளும் மனிதன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். எளிதாய்ச் சினம் கொள்பவன் பாவம் செய்ய அதிகச் சார்புள்ளவனாய் இருக்கிறான். |
23
|
அகங்காரியைத் தாழ்வு பின்தொடர்கின்றது. மனத்தாழ்ச்சியுடையோன் மகிமை அடைவான். |
24
|
திருடனுடன் பங்கு பெறுகிறவன் தன் ஆன்மாவைப் பகைக்கிறான். அவன் ஆணையிடுகிறதைக் கேட்டும் தான் (அவனைக்) காட்டிக் கொடுப்பதில்லை. |
25
|
மனிதனுக்கு அஞ்சுகிறவன் விரைவில் மடிவான். ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவன் உயர்த்தப்படுவான். |
26
|
அரசனின் சமூகத்தைத் தேடுகிறவர்கள் பலராம். ஆனால், ஒவ்வொருவருடைய நீதித் தீர்ப்பும் ஆண்டவரிடமிருந்து புறப்படுகின்றது. |
27
|
நீதிமான்கள் அக்கிரமியான மனிதனை வெறுக்கிறார்கள். அக்கிரமிகளோ நன்னெறியில் ஒழுகுகிறவர்களை வெறுக்கிறார்கள். வார்த்தையைக் காக்கிறவன் அழிவிற்கு ஆளாகவே மாட்டான். |