Indian Language Bible Word Collections
Proverbs 28:9
Proverbs Chapters
Proverbs 28 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 28 Verses
1
எவனும் துரத்தாமலே அக்கிரமி ஓடுகின்றான். நீதிமானோ திடமுள்ள சிங்கம்போல் அச்சமின்றி இருப்பான்.
2
குடிகளின் பாவங்களை முன்னிட்டே அதிகாரிகள் பெருகி வருகின்றனர். ஆனால் ஒருவனுடைய அறிவின் நிமித்தமாகவும், அவன் பேசுகிற நியாயமுள்ள வார்த்தைகளின் நிமித்தமாகவும் (நாட்டில்) ஒழுங்கு நிலையாய் இருக்கும்.
3
ஏழைகளைத் துன்புறுத்தும் ஏழை பஞ்சத்தை வருவிக்கும் கடுமழைக்கு ஒப்பாயிருக்கிறான்.
4
(தெய்வ) கட்டளையைக் கைநெகிழ்கிறவர்கள் அக்கிரமியைப் புகழ்கிறார்கள். (அதைக்) காக்கின்றவர்களோ அவன்மேல் மிகவும் எரிச்சல் கொள்கிறார்கள்.
5
தீய மனிதர் ஒழுங்கானதைச் சிந்திக்கிறதில்லை. ஆனால், ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள்.
6
தீய வழிகளில் (நடக்கும்) செல்வனைவிட நேர்மையாய் நடக்கும் ஏழையே உத்தமன்.
7
கட்டளையைக் கைக்கொண்டொழுகுபவன் ஞானமுள்ள மகனாய் இருக்கிறான். ஆனால், பேருண்டியாளரைப் பேணுகிறவன் தன் தந்தையை மானபங்கப் படுத்துகிறான்.
8
வட்டிகளாலும் ஊதியத்தாலும் செல்வத்தைக் குவிக்கிறவன் ஏழைகள்மேல் இரக்கமுள்ளவனுக்கே அவற்றைச் சேகரிக்கிறான்.
9
கட்டளையைக் கேளாதபடி தன் காதுகளைத் திருப்புகிறவனுடைய மன்றாட்டு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
10
நீதிமான்களை ஏமாற்றித் தீய நெறியில் திருப்புகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுந்து மடிவான். நேர்மையுடையோரோ நலம் அடைவார்கள்.
11
செல்வன் தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றுகிறான். ஆனால், விவேகமுள்ள ஏழை அவன் (ஞானத்தைச்) சோதித்தறிவான்.
12
நீதிமான்களின் நன்மதிப்பிலே பலருக்கும் பெருமை. அக்கிரமிகளின் ஆட்சியிலே பலருக்கும் அழிவு.
13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழவே மாட்டான். ஆனால், அவைகளை அறிக்கை செய்து, விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.
14
எப்போதும் அச்சம் கொண்டிருக்கிறவன் பேறு பெற்றோன். கல்நெஞ்சன் தீமையில் விழுந்து மடிவான்.
15
இரக்கமற்ற அரசன் ஏழைக் குடிகளுக்கு முழங்குகின்ற சிங்கமும், பசித்திருக்கிற கரடியும் (போலாவான்).
16
விவேகமற்ற பிரபு பொய்க் குற்றம் சாட்டுதலால் பலரை அழிவுக்கு ஆளாக்குகிறான். பேராசையைப் பகைக்கிறவனுடைய நாட்களோ நீடியவையாய் இருக்கும்.
17
மாசற்ற இரத்தத்தைச் சிந்தின மனிதன் குழியில் விழமட்டும் ஓடினாலும் அவனைத் தடுக்காதீர்கள்.
18
நேர்மையாய் நடக்கிறவன் பத்திரமாய் இருப்பான். தீய நெறிகளில் நடக்கிறவன் திடீரென விழுவான்.
19
தன் நிலத்தை உழுகிறவன் அப்பத்தால் நிறைவு காண்பான். ஓய்வை விரும்புகிறவன் வறுமையால் வருத்தப்படுவான்.
20
உண்மையுள்ளவன் மிகவும் புகழப்படுவான். செல்வம் சேர்க்கும் பேராசையால் பீடிக்கப்பட்டவன் மாசற்றவனாய் இரான்.
21
நீதித் தீர்வையில் ஒருதலைச் சார்பு காட்டுகிறவன் நன்றாய்ச் செய்வதில்லை. அவன் ஒருவாய் உணவுக்காக உண்மையைக் கைவிடுகிறான்.
22
மற்றவர்கள்மேல் பொறாமைப்பட்டுத் தானே செல்வனாக முயலும் மனிதன் தனக்கே வறுமை வருமென்பதை அறியான்.
23
நாவின் இச்சகத்தால் ஒருவனை ஏய்க்கிறவனைவிட, இவனைக் கண்டிக்கிற மனிதன் இவனுக்கு அதிக விருப்பமுள்ளவனாய் இருப்பான்.
24
தன் தாய் தந்தையரிடமிருந்து யாதொன்றை அபகரித்தும் அது பாவம் இல்லை என்கிறவன், கொலைபாதகத்தின் பங்காளியாய் இருக்கிறான்.
25
தன்னைத்தானே வீம்பு பாராட்டி அதில் பெருமைப்படுகிறவன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். ஆனால், ஆண்டவர்பால் நம்பிக்கையாய் இருக்கிறான் நிறைவு அடைவான்.
26
தன் மன வலிமையில் ஊன்றி நம்பிக்கையாய் இருக்கிறவன் மதியீனனாய் இருக்கிறான். ஆனால், விவேகமாய் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்,
27
ஏழைக்குத் (தர்மம்) கொடுக்கிறவன் ஏழையாய் இரான். பிச்சை கேட்கிறவனை நிந்திப்பவன் வறுமையை அனுபவிப்பான்.
28
அக்கிரமிகள் எழுந்திருக்கையில் மனிதர்கள் மறைந்து கொள்வார்கள். (ஆனால்) அவர்கள் அழிவுறும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.