Indian Language Bible Word Collections
Proverbs 27:19
Proverbs Chapters
Proverbs 27 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 27 Verses
1
|
நாளை என்ன பிறப்பிக்குமென்று அறியாமலிருப்பதால், மறுநாளைப்பற்றி நீ பெருமை பாராட்ட வேண்டாம். |
2
|
உன் வாயல்ல, வேறோருவனே - உன் உதடுகளல்ல, அன்னியனே - உன்னைப் புகழ்வானாக. |
3
|
பாறை கனமாயும், மணல் பாரமாயும் இருக்கின்றன. ஆனால், மதியீனரின் கோபமோ இவ்விரண்டையும்விட அதிகக் கனமானது. |
4
|
சினமும், பொங்குகின்ற கோபவேறியும் இரக்கமற்றவை. கோப வெறியனுடைய கோபத்தின் கொடுமையைப் பொறுக்கக் கூடியவன் யார் ? |
5
|
உள்ளரங்க நேசத்தைவிட வெளியரங்கக் கண்டனமே அதிக நல்லது. |
6
|
பகைவனின் வஞ்சக முத்தங்களைக் காட்டிலும் நண்பன் தரும் காயங்களே அதிக நலமானவை. |
7
|
பசியாற உண்டவன் தேனையும் காலால் மிதிப்பான். பசியால் வருந்துகின்றவன் கசப்பானதையும் இனிப்பென்று அருந்துவான். |
8
|
தன் கூட்டை விட்டகன்று பறக்கும் பறவை எவ்வாறோ, அவ்வாறே தன் இடத்தை விட்டொழித்த மனிதனும். |
9
|
நறுமணத் தைலத்தாலும் வெவ்வேறு நறுமணப் பொருட்களாலும் இதயம் அக்களிக்கின்றது. ஆன்மாவோ நண்பனின் நல்லாலோசனைகளால் அக்களிக்கின்றது. |
10
|
உன் நண்பனையும் உன் தந்தையின் நண்பனையும் கைவிடாதே. உன் துயர நாளில் உன் சகோதரன் வீட்டில் நுழையாதே. தூரமாயிருக்கிற சகோதரனைவிட அருகிலுள்ள அயலானே தாவிளை. |
11
|
உன்னைக் கண்டிக்கிறவனுக்கு மறுமொழி சொல்லும்படியாக, என் மகனே, ஞானத்தைப் படித்து என் இதயத்தை மகிழ்வி. |
12
|
விவேகமுள்ளவன் தீமையைக் கண்டு மறைந்து கொண்டான். அதைக் கவனியாமையால் (மற்றவர்கள்) துன்பங்களை அனுபவித்தார்கள். |
13
|
அன்னியனுக்குப் பிணையானவனுடைய ஆடையையும் நீ எடுத்துக்கொள். பிறருக்காக அவனிடம் பிணையையும் வாங்கு. |
14
|
விடியற்காலை உரத்த குரலில் தன் அயலானை ஆசீர்வதிக்கிறவன், இரவில் எழுந்து அவனைச் சபிக்கிறவனுக்குச் சரியொத்தவனாய் இருக்கிறான். |
15
|
குளிர் நாளில் ஒழுகும் கூரையும், சண்டைக்காரியான மனைவியும் சமானமாம். |
16
|
அவளை அடக்குகிறவன் காற்றைப் பிடிக்கிறவனுக்குச் சமானம். அவன் அதனைத் தன் வலக்கைத் தைலமென்றே அழைப்பான். |
17
|
இரும்பு இரும்பால் தீட்டப்படுகின்றது. மனிதனோ தன் நண்பனால் தூண்டப்படுவான். |
18
|
அத்தி மரத்தைப் பேணி வளர்ப்பவன் அதன் கனிகளை உண்பான். தன் ஆண்டவரின் பாதுகாவலில் இருப்பவன் எவனோ, அவன் மகிமைப்படுத்தப் பெறுவான். |
19
|
நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ, அவ்வாறே மனிதர்களுடைய இதயங்கள் விவேகிகளுக்கு வெளியரங்கமாய் இருக்கின்றன. |
20
|
நரகமும் அழிவும் ஒருகாலும் நிறைவு பெறுவதில்லை. அவ்வாறே மனிதருடைய கண்களும் நிறைவு பெறாதனவாம். |
21
|
உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவதுபோல, மனிதன் தன்னைப் புகழ்கின்றவனுடைய வாயால் பரிசோதிக்கப்படுகிறான். அக்கிரமியின் இதயம் தீமையைத் தேடுகின்றது. நேர்மையான இதயமோ அறிவைத் தேடுகின்றது. |
22
|
வாற்கோதுமையை உலக்கையால் இடிப்பது போல் மதியீனனை உரலில் (இட்டுக்) குத்தினாலும் அவனுடைய மதியீனம் அவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டாது. |
23
|
உன் ஆடுகளின் முகத்தையும் நன்றாய்க் கவனித்து அறி; உன் மந்தைகளையும் ஆராய்ந்து பார். |
24
|
ஏனென்றால், நீ எப்போதும் நலமுடையவனாய் இராய். மேலும், தலைமுறை தலைமுறையாய் கிரீடம் கொடுக்கப்படவு மாட்டாது. |
25
|
புல் தரையில் புல் முளைத்திருக்கின்றது. பசுமை நிறை பூண்டுகள் காணப்படுகின்றன. மலைகளினின்று காய்ந்த புல்லும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது. |
26
|
செம்மறியாடுகள் உன் ஆடைக்கும், வெள்ளாடுகள் வயலின் விலைக்கும், |
27
|
வெள்ளாடுகளின் பால் உன் உணவுகளுக்கும், உன் விட்டின் தேவைகளுக்கும், உன் ஊழியரின் உணவுக்கும் போதியனவாய் இருக்கட்டும். |