Indian Language Bible Word Collections
Proverbs 22:29
Proverbs Chapters
Proverbs 22 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 22 Verses
1
|
நற்புகழ் அளவற்ற திரவியத்தைக் காட்டிலும் நல்லதாம். நன்கு மதிக்கப்பெறுவது வெள்ளியையும் பொன்னையும்விட மேலானதாம். |
2
|
செல்வந்தனும் வறியவனும் எதிர்ப்பட்ட வராயினும் ஆண்டவரே அவ்விருவரையும் படைத்தார். |
3
|
நுண்ணறிவு உள்ளவன் தீமையைக் கண்டு ஒளிந்துகொள்கிறான். கபடில்லாதவன் கடந்து செல்லவே அழிவுக்கு உள்ளாகுகிறான். |
4
|
அடக்க ஒடுக்கத்தினால் வரும் உயர்பேறு தெய்வபயம், செல்வம், மகிமை, வாழ்வு ஆகியவையாம். |
5
|
அக்கிரமியின் வழியில் படையணிகளும் வாழுமாம். தன் ஆன்மாவைக் காக்கிறவனோ அவற்றினின்று அகன்று போகிறான். |
6
|
இளைஞன் தன் வாலிப நாட்களில் சென்ற நெறியைத் தன் முதுமையிலும் விடான் என்பது பழமொழி. |
7
|
செல்வந்தன் வறியவர்களுக்கு அரசனாய் இருக்கிறான். கடன் வாங்குகிறவனோ கடன் கொடுக்கிறவனுக்கு அடிமையாகிறான். |
8
|
அக்கிரமத்தை விதைக்கிறவன் தீமையை அறுப்பான்; தன் கோபக் கொடுமையால் நசுக்கப்படுவான். |
9
|
இரக்கத்துக்குச் சார்பாய் இருக்கிறவன் ஆசி பெறுவான். ஏனென்றால், அவன் தன் அப்பங்களினின்றும் ஏழைக்குத் தந்தான். வெகுமதிகளைத் தருகிறவன் வெற்றியும் மகிமையும் அடைவான். ஏனென்றால், வாங்குகிறவர்களுடைய ஆன்மாவை அவன் தன் வயப்படுத்துகிறான். |
10
|
கேலி செய்பவனைத் துரத்து. அவன் ஓடிப்போனபின் சண்டையும் ஒழியும்; வழக்குகளும் நிந்தைகளும் ஒழிந்துபோம். |
11
|
இதயத் தூய்மையை நேசிக்கிறவன் தன் உதடுகளின் நயத்தால் அரசனையும் நண்பனாக்கிக் கொள்கிறான். |
12
|
ஆண்டவருடைய கண்கள் அறிவுக்கலையைக் காக்கின்றன. அக்கிரமியின் வார்த்தைகள் தள்ளிவிடப்படுகின்றன. |
13
|
சிங்கம் வெளியே இருக்கின்றது; நான் (வெளி வந்தால்) தெருக்களின் நடுவில் கொல்லப்படுவேன் என்கிறான் சோம்பேறி. |
14
|
அன்னிய பெண்ணின் வாய் ஆழமான குழியாம். ஆண்டவர் எவன்மேல் கோபமாய் இருக்கிறாரோ அவன் அதில் விழுவான். |
15
|
சிறுவனின் இதயத்தில் மடமை கட்டப்பட்டிருக்கிறது. போதகக் கோலோ அதனை ஓட்டி விடும். |
16
|
தன் செல்வத்தைப் பெருக்கும்படி ஏழையை வஞ்சிப்பவன், தன்னிலும் அதிகச் செல்வனுக்குத் தன் சொத்துகளைக் கொடுத்து விட்டுப் பிச்சையும் எடுப்பான். |
17
|
செவி கொடுத்து ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேள். என் போதகத்துக்கும் உன் இதயத்தைத் திருப்பு. |
18
|
அதை உன் இதயத்தில் காக்கும்போது உனக்கு அது அழகுள்ளதாய் இருப்பதுமின்றி, உன் உதடுகளிலும் பொழியும். |
19
|
உன் நம்பிக்கை ஆண்டவர்பால் இருக்கும் படியாகவே, நான் இன்று அதை உனக்குக் காண்பித்தேன். |
20
|
ஆலோசித்துத் தெளிவாய் அதை மூன்று விதமாய் உனக்கு விரித்துரைத்தேன். |
21
|
உன்னை அனுப்பினவர்களுக்கு உண்மையான வார்த்தையைப் பதிலாக உரைக்கும்படி உறுதியும் உண்மையுமான வாக்கியங்களை உனக்குக் கற்றுக் கொடுத்தேன். |
22
|
ஏழையை வலுவந்தம் செய்யாதே. ஏனென்றால், அவன் ஏழையாய் இருக்கிறான். எளியவனையும் வாசலில் நசுக்காதே. |
23
|
ஏனென்றால், ஆண்டவரே அவனுடைய வழக்கைத் தீர்த்து, அவனுடைய ஆன்மாவைக் குத்தினவர்களைக் குத்துவார். |
24
|
கோபியான மனிதனின் நண்பனாய் இராதே. கோபவெறியுள்ள மனிதனோடு பழகாதே. |
25
|
ஏனென்றால், அவன் வழிகளை நீயும் ஒரு வேளை கற்றுக் கொள்ளவும், உன் ஆன்மாவுக்கு இடறலைத் தேடிக் கொள்ளவும் கூடுமன்றோ ? |
26
|
தங்கள் கைகளைக் கட்டுகிறவர்களோடும், கடனுக்குத் தங்களை உத்தரவாதிகளாக ஒப்புக் கொடுக்கிறவர்களோடும் இராதே. |
27
|
ஏனென்றால், ஈடு செய்ய உனக்கு வகையில்லாதபோது உன் கட்டிலின் மூடு துணியை அவன் எடுத்துக் கொண்டு போவதற்குக் காரணம் ஏது ? |
28
|
உன் முன்னோர் முன்னாளில் நட்டின எல்லைக் கற்களைப் பெயர்க்காதே. |
29
|
தன் அலுவலில் சுறுசுறுப்புள்ள மனிதனைக் கண்டாயோ ? அவன் அரசனின்முன் நிற்பானேயன்றிக் கீழ் மக்களிடத்தில் இரான். |