Indian Language Bible Word Collections
Proverbs 21:29
Proverbs Chapters
Proverbs 21 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 21 Verses
1
|
நீரோடைகள் எவ்வாறோ அவ்வாறே ஆண்டவர் கையில் அரசனின் இதயம். அவர் தம் விருப்பப்படி அதைச் சாய்ப்பார். |
2
|
மனிதனுடைய நெறியெல்லாம் அவனுக்கு முறையானவையாய்த் தோன்றுகின்றன. ஆனால், ஆண்டவர் இதயங்களை எடைபோடுகிறார். |
3
|
இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல் பலிகளைவிட ஆண்டவருக்கு அதிக விருப்பமாம். |
4
|
பார்வையின் பெருமிதமே மனத்தின் அகந்தையாம். அக்கிரமிகளிடம் பிறக்கிறதெல்லாம் பாவமாம். |
5
|
சுறுசுறுப்புள்ளவனின் சிந்தைகள் எப்போதும் சுகத்தைத் தரும். ஆனால், சோம்பேறி எவனும் எப்போதும் வறுமையால் வருத்தப்படுவான். |
6
|
பொய் சொல்வதின் மூலம் செல்வத்தைச் சேகரிக்கிறவன் வீணனும் மூடனுமாம். அவன் சாவுக் கண்ணிகளில் சிக்கிக்கொள்வான். |
7
|
நீதியின்படி நடக்க மனமில்லாத அக்கிரமிகள் பறித்துக்கொண்ட பொருட்கள் அவர்களுக்கே இழப்பாய் முடியும். |
8
|
தீயவன் தீய நெறியில் செல்கிறான். தூயவனாய் இருக்கிறவனோ நேர்மையான செயலைச் செய்கிறான். |
9
|
சண்டைக்காரியுடன் பொதுவீட்டில் இருப்பதைவிட மொட்டை மாடியின் மூலையில் இருப்பது அதிக நல்லதாம். |
10
|
அக்கிரமியின் ஆன்மா தீமையை நாடுகின்றது. தன் அயலானுக்கும் அவன் இரங்கமாட்டான். |
11
|
தீயவன் தண்டிக்கப்படுவதன்மூலம் நேர்மையாளன் அதிக ஞானமுள்ளவனாவான். ஞானியை அவன் பின்தொடர்வானானால் அறிவையும் பெறுவான். |
12
|
அக்கிரமிகளைத் தீமையினின்று அகற்றும் பொருட்டு நீதிமான் அக்கிரமியின் வீட்டைத் (திருத்த) முயல்கிறான். |
13
|
ஏழையின் கூக்குரலுக்குத் தன் காதை இறுக மூடுகிறவன் தானும் கூக்குரலிட்டுக் கூப்பிடுவான்; கேட்கப்படவும் மாட்டான். |
14
|
இரகசியமாய்ச் செய்த நன்கொடை கோபத்தையும், மடியில் இடப்பட்ட கொடை மிகுந்த கோப வெறியையும் தணிக்கின்றன. |
15
|
புண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே நீதிமானுக்கு மகிழ்ச்சி. அநீதத்தைச் செய்கின்றவர்களுக்குத் திகிலேயாம். |
16
|
போதகத்தின் நெறியினின்று தவறி நடந்த மனிதன் இறந்தவரின் கூட்டத்தில் குடியிருப்பான். |
17
|
பேருண்டியை நாடுகிறவன் எளிமையில் இருப்பான். மதுபானத்தையும் கொழுத்தவற்றையும் நாடுகிறவன் செல்வனாகமாட்டான். |
18
|
நீதிமானுக்குப் பதிலாய் அநீதனும், நேர்மையாளனுக்குப் பதிலாய்த் தீயவனும் விடுவிக்கப்படுகின்றான். |
19
|
வாதாடியும் கோபியுமான மனைவியோடு வாழ்வதைவிடப் பாலைவனத்தில் (வாழ்வதே) அதிக நல்லதாம். |
20
|
விரும்பத் தக்க செல்வமும் எண்ணெயும் நீதிமானின் உறைவிடத்தில் இருக்கும். மதிகெட்ட மனிதன் அவற்றைச் சிதறடிப்பான். |
21
|
நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுகிறவன் வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். |
22
|
ஞானமுள்ளவன் வல்லவர்களின் நகருக்குள் நுழைந்து, அவர்கள் நம்பியிருந்த மதிற்சுவரை அழித்தான். |
23
|
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் இடுக்கணில் நின்று தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். |
24
|
தன் கோபத்தில் அகந்தையைக் காட்டுகிறவன் மூடனும் அகங்காரியும் எனப் பெயர் பெறுவான். |
25
|
சோம்பேறி தன் ஆசைகளால் வருத்தப்படுவான். ஏனென்றால், அவன் கைகள் எந்த வேலைக்கும் உதவமாட்டா. |
26
|
அவன் நாள் முழுதும் ஆவலோடு இச்சிக்கிறான். ஆனால், நீதிமானாய் இருக்கிறவன் கொடுப்பான்; ஓயாமல் கொடுப்பான். |
27
|
தீமையின் மூலமாய் ஒப்புக்கொடுக்கிற தீயவருடைய பலிகள் அருவருப்புக்குரியன. |
28
|
பொய்ச்சாட்சி சொல்பவன் அழிவான். கீழ்ப்படிகின்ற மனிதன் வெற்றி அடைவான். |
29
|
அக்கிரமி வெட்கமின்றியே தன் முகத்தைக் காட்டுகிறான். நேர்மையானவனோ தன் நெறியைத் திருத்துகிறான். |
30
|
ஆண்டவருக்கு விரோதமாய் ஞானமுமில்லை; விவேகமுமில்லை; அறிவுரையும் இல்லையாம். |
31
|
போர்நாளுக்காகக் குதிரை பழக்கப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பைத் தருகிறவர் ஆண்டவரே. |