Indian Language Bible Word Collections
Proverbs 20:13
Proverbs Chapters
Proverbs 20 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 20 Verses
1
|
மதுபானம் காமத்தைத் தூண்டக்கூடிய பொருளாம். குடிவெறி குழப்பத்தை உண்டாக்குவதாம். இவற்றில் நாட்டம் கொள்பவன் எவனும் ஞானியாய் இரான். |
2
|
சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனது பயங்கரமும். அவனைக் கோபமூட்டுகிறவன் தன் ஆன்மாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறான். |
3
|
சச்சரவுகளுக்கு உட்படாமல் இருப்பது மனிதனுக்கு மகிமையாம். ஆனால் மதியீனர் அனைவரும் சச்சரவுகளில் கலந்து கொள்கிறார்கள். |
4
|
குளிரின் நிமித்தம் சோம்பேறி உழ மாட்டான். (ஆகையால்) கோடைக் காலத்தில் அவன் பிச்சை எடுப்பான்; அவனுக்கு ஒன்றும் கொடுக்கப்படவு மாட்டாது. |
5
|
ஆழமான நீர்போல ஞானம் மனிதனின் இதயத்தில் இருக்கின்றது. இருந்தும், அறிவுடையான் அதனைக் கண்டெடுப்பான். |
6
|
பல மனிதர் இரக்கமுள்ளவர்கள் எனப்படுகிறார்கள். ஆனால், பிரமாணிக்கமுள்ள மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார் ? |
7
|
நேர்மையாய் நடக்கும் நீதிமான் தன் பிறகே பேறு பெற்ற மக்களை விட்டுப் போவான். |
8
|
நீதி அரியணையில் அமர்கிற அரசன் தன் பார்வையாலேயே தீமை அனைத்தையும் அகற்றுகிறான். |
9
|
என் இதயம் தூய்மையானது; நான் பாவத்தினின்று குற்றமற்றவனாய் இருக்கிறேன் என்று சொல்லக் கூடியவன் யார் ? |
10
|
மாறுபாடுள்ள நிறை, குறையுள்ள அளவு ஆகிய இவ்விரண்டும் கடவுளால் வெறுக்கப்படுவனவாம். |
11
|
தன் செயல்கள் பரிசுத்தமும் நேர்மையுமானவையோ என்று ஒரு சிறுவன் தன் குணங்குறைகளால் அறியப்படுகிறான். |
12
|
கேட்கிற செவி, பார்க்கிற கண் ஆகிய இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார். |
13
|
நீ வறுமையால் வதைக்கப்படாதபடிக்கு அதிகமாய் உறங்க விரும்பாதே. விழித்திரு; (அப்போது) அப்பத்தால் நிறைவு அடைவாய். |
14
|
கொள்வோன் எவனும்: உதவாதது, உதவாதது என்கிறான்; ஆனால், அப்பால் அகன்றபின் அதைப் புகழ்ந்து கொள்கிறான். |
15
|
பொன்னும் பல முத்துகளும் இருப்பினும், ஞானியின் உதடுகளே விலை பெற்ற அணியாம். |
16
|
அன்னியனுக்குப் பிணையாய் நின்றவனின் ஆடையை எடுத்துக் கொள். அன்னியர்களுக்காகவும் அவனிடம் பிணையை வாங்கிக்கொள். |
17
|
வஞ்சகத்தின் அப்பம் மனிதனுக்குச் சுவையுள்ளதாய் இருக்கின்றது; ஆனால், பின்பு அவன் வாய் போடிக்கற்களால் நிறையும். |
18
|
சிந்தனைகள் ஆலோசனைகளால் உறுதிப்படுகின்றன. போர்களையும் விசாரணைக்குப் பின்னரே நடத்த வேண்டும். |
19
|
இரகசியத்தையும் வெளியாக்கி, வஞ்சகமாய் நடந்து, தன் உதடுகளையும் அகலத் திறக்கிறவனுடன் நீ பழக்கம் வைத்துக்கொள்ளாதே. |
20
|
தன் தந்தையையும் தாயையும் சபிக்கிறவனுடைய விளக்கு இருளில் அவிக்கப்படும். |
21
|
தொடக்கத்தில் துரிதமாய்ச் சம்பாதிக்கப்படுகிற சொத்து இறுதியில் ஆசி அற்றதாகப் போகும். |
22
|
தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே. ஆண்டவரை நம்பிக் காத்திரு. அவரன்றோ உன்னைக் காப்பார்! |
23
|
குறையும் எடை ஆண்டவர்பால் வெறுப்புக்குள்ளதாம். கள்ளத் தராசும் நல்லதன்று. |
24
|
மனிதனுடைய அடிச்சுவடுகள் ஆண்டவரால் நடத்தப்படுகின்றன. ஆனால், மனிதரில் எவன் தன் கதியைக் கண்டுபிடிக்கக் கூடியவன் ? |
25
|
பரிசுத்தவான்களை விழுங்குவதும், தன் நேர்ச்சைகளைத் தட்டிக்கழிப்பதும் மனிதனுக்கு அழிவையே தரும். |
26
|
ஞானமுள்ள அரசன் தீயோருக்குத் தண்டனை விதிக்கிறான். (தண்டனையாகத்) தன் தேரின் கீழே அவர்களை நசுக்கி விடுவான். |
27
|
மனிதனிடமுள்ள ஆன்மா அவனுடைய உள்ளத்தின் இரகசியங்களை யெல்லாம் சோதிப்பதற்கு ஆண்டவரால் படைக்கப்பட்ட விளக்காம். |
28
|
இரக்கமும் உண்மையும் அரசனைப் பாதுகாக்கின்றன. அவன் அரியணையும் சாந்தத்தால் உறுதிப்படுகின்றது. |
29
|
வாலிபர்களின் மகிழ்ச்சியே அவர்களுடைய பலமாம். கிழவர்களுடைய மகிமை அவர்களுடைய நரைத் தலையேயாம். |
30
|
காயத்தின் தழும்பு தீமைகளை அகற்றும். கசையடி உள் உயிரைக் குணப்படுத்தும். |