Indian Language Bible Word Collections
Proverbs 16:3
Proverbs Chapters
Proverbs 16 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 16 Verses
1
ஆன்மாவில் கருத்துக் கொள்தல் மனிதனுடையது. அவனது நாவை ஆள்வது கடவுளுடையது.
2
மனிதனுடைய செயல்கள் யாவும் அவன்தன் கண்களுக்கு நன்றாயிருக்கின்றன. (ஆனால்) அவன் உள்ளத்தைப் (பரிசோதித்து) நிறுக்கிறவர் ஆண்டவரே.
3
உன் செயல்களை ஆண்டவருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்ப்படுத்தப்படும்.
4
ஆண்டவர் எல்லாவற்றையும் தமக்காகவே செய்திருக்கிறார். அக்கிரமையையுங்கூடத் தண்டனை நாளுக்காகத்தான்.
5
அகங்காரிகள் அனைவரையும் ஆண்டவர் வெறுக்கிறார். அவர் உதவியாக அவன் கைக்குள் (தம்) கையை வைத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பிக்கொள்ளான். அறநெறியின் தொடக்கம் நீதியைச் செய்தலாம். அதுவே பலிகளைப் படைப்பதைவிடக் கடவுளுக்கு அதிக விருப்பமானது.
6
இரக்கமும் உண்மையும் அக்கிரமத்தை நிவர்த்தி செய்யும். ஆண்டவர்பால் பயம் இருந்தால் பாவத்தை விட்டு விலக முடியும்.
7
ஒரு மனிதனின் வழிகள் ஆண்டவருக்கு விருப்பமாய் இருக்குமாயின், இம்மனிதன் தன் பகைவர்களையுஙள்கூடச் சமாதானப் படுத்துவான்.
8
அக்கிரமத்தோடு நிறைவு கொண்டிருப்பதைவிட நீதியோடு வறுமையுற்றிருப்பது நன்று.
9
மனிதனுடைய இதயம் தன் வழியைச் சீர்ப்படுத்துகின்றது. ஆனால், கடவுள்தாமே அவனுடைய அடிச் சுவடுகளை நடத்துகிறவர்.
10
அரசனின் வார்த்தை கடவுளின் வார்த்தையாம். அவனுடைய வாயும் நீதித் தீர்வையில் தவறாது.
11
ஆண்டவருடைய தீர்ப்புகள் நியாயமான நிறையும் தராசுமாம். அவருடைய செயல்களெல்லாம் சாக்கிலுள்ள நிறைகற்களாம்.
12
அக்கிரமஞ் செய்வோரை அரசன் வெறுக்கிறான். ஏனென்றால், நீதியாலே (அவன்) அரியணை நிலைப்பெறுகின்றது.
13
உண்மையை உரைக்கும் உதடுகளே அரசனுக்கு விருப்பமானவை. நேர்மையானவற்றைப் பேசுகிறவன் நேசிக்கப்படுவான்.
14
அரசனின் கோபமே சாவின் தூதன். ஞானமுள்ள மனிதன் இக் கோபத்தை அமர்த்துவான்.
15
அரசனுடைய முக மலர்ச்சியில் வாழ்வு. அவனுடைய சாந்தம் வசந்த காலத்து மழை போலாம்.
16
பொன்னைவிட மேலானதாய் இருக்கிற ஞானத்தைக் கொண்டிரு. வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்துகொள்.
17
நீதிமான்களுடைய பாதை தீமையை விலக்குகின்றது. தன் ஆன்மாவை எவன் காக்கிறானோ அவன் தன் வழியைக் காக்கிறான்.
18
அகங்காரம் முன்னும் அழிவு பின்னும் வருமுன்னே மனம் செருக்குறும்.
19
அகங்காரிகளுடன் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவதைவிடச் சாந்தமுள்ளவர்களுடன் சிறுமைப்படுவது அதிக நல்லது.
20
வார்த்தையில் கவனமுள்ளவன் நன்மையைக் கடைப்பிடிப்பான். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பெறு பெற்றோன்.
21
இதயத்தில் ஞானமுடையோன் விவேகியென்று அழைக்கப்படுவான். வாய்ப்பேச்சில் இனிமை உள்ளவனோ மேலானவற்றைப் பெறுவான்.
22
ஞானத்தைக் கற்று அறிகிறவனுக்கு (அது) வாழ்வின் ஊற்றாம். மதிகெட்டோரின் படிப்பினை பைத்தியமாம்.
23
ஞானியின் இதயம் அவன் வாயைப் படிப்பிக்கும். அவன் வாயின் வார்த்தையால் ஞானம் பெருகிவரும்.
24
நல்ல வார்த்தைகள் தேனைப்போல் (இன்பமாய் இருக்கும்). உடல் நலமும் ஆன்மாவின் இனிமையாய் இருக்கும்.
25
நேர்மையானதென்று மனிதனுக்குத் தோன்றுகிற நெறி உண்டு. ஆனால், அதன் கடைசி எல்லைகள் சாவிற்குக் கூட்டிச் செல்கின்றன.
26
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான். ஏனென்றால், அவன் வாயே அவனைக் கட்டாயப் படுத்துகின்றது.
27
தீய மனிதன் தீமையைச் செய்ய முயற்சி செய்கிறான். அவனுடைய உதடுகளிலும் நெருப்பு பற்றி எரியும்.
28
கெட்டுப்போன மனிதன் சச்சரவை மூட்டுகிறான். வாயாடி அரசர்களைப் பிரிக்கிறான்.
29
அநீதனான மனிதன் தன் அயலானை ஏமாற்றி, அவனைத் தீய வழியில் கூட்டிச் செல்கிறான்.
30
தன் கண்களை மூடிக்கொண்டு உதடுகளைக் கடித்துக்கோண்டு தீங்கு நினைப்பவன் அதையே செய்வான்.
31
நீதி நெறிகளில் காணப்படும் முதுமையே மகிமையின் முடியாம்.
32
வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.
33
மடியில் திருவுளச்சீட்டு போடப்படும். ஆனால், திருவுளம் கடவுளால் வெளிப்படுத்தப்படும்.