நீ ஏழு விளக்குகளை ஏற்றும்போது, விளக்குத் தண்டைத் தென்புறத்திலே நிறுத்தக்கடவாய். ஆதலால், விளக்குகள் காணிக்கை அப்பங்களின் மேசைக்கு நேரே வடபுறத்தை நோக்கியிருக்கும்படி கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று கட்டளையிடுவாய். அவை விளக்குத் தண்டுக்கு எதிராகவே எரிய வேண்டும் என்று சொல்வாய் என்றருளினார்.
இந்த விளக்குத் தண்டு செய்யப்பட்ட விதமாவது: நடுத்தண்டு முதல் கிளைகளின் இரு பக்கத்திலுமுள்ள பூக்கள் வரையிலும் பொன்னாலான தண்டு சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டிருந்தது. ஆண்டவர் தமக்குக் காண்பித்திருந்த மாதிரியின்படியே மோயீசன் அதனைச் செய்தார்.
எவ்விதமென்றால்: நீ அவர்கள் மேல் சுத்திகரிப்பு நீரைத் தெளித்த பின்பு, அவர்கள் உடல் முழுவதையும் சவரம் செய்து, தங்கள் உடைகளையும் தங்களையும் கழுவிக் கொண்டபின்,
அதன் பிறகு லேவியர்கள் காளைகளின் தலைமீது தங்கள் கைகளை வைப்பார்கள். நீயோ பாவ நிவாரணப் பலியாக இரண்டில் ஒரு காளையையும், அவர்களுக்காக நீ வேண்டிக்கொள்ளும்படி ஆண்டவருக்கு முழுத் தகனப் பலியாக மற்றொரு காளையையும் பலியிடுவாய்.
இவையெல்லாம் நிறைவேறின பிறகு அவர்கள் நமக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு உடன்படிக்கைக் கூடாரத்தினுள் புகுவார்கள். இதுவே நீ அவர்களைப் புனிதப்படுத்தி, ஆண்டவராகிய நமக்கு இஸ்ராயேல் மக்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களென்று அபிசேகம் செய்யவேண்டிய சடங்கு முறை.
இஸ்ராயேல் மக்களிடையே மனிதரிலும் மிருகங்களிலும் முதற் பேறானவையெல்லாம் நம்முடையனவல்லவா? நாம் எகிப்து நாட்டில் முதற் பேறானவற்றையெல்லாம் அழித்த நாள் முதற் கொண்டு அவற்றை நமக்கே புனிதப்படுத்திக் கொண்டோம்.
அவர்கள் இஸ்ராயேல் மக்கள் சார்பாக உடன்படிக்கைக் கூடாரத்தில் பணிவிடை செய்யும்படியாகவும், இஸ்ராயேல் மக்களில் மற்ற எவனாயினும் மூலத்தானத்தின் உள்ளே புகத் துணிந்தால் இஸ்ராயேல் மக்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி அவர்களுக்காக வேண்டிக் கொள்ளும்படியாகவும், நாம் லேவியரை இஸ்ராயேல் மக்களினின்று பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்தோம் என்றார்.
அவர்கள் புனிதர்களாய் ஆரோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் முன்பாக உடன்படிக்கைக் கூடாரத்தினுள் தங்கள் பணிவிடைகளைச் செய்யப் புகும் வண்ணம் அவர்களுக்காக மன்றாடினார். ஆண்டவர் லேவியரைக் குறித்துக் கட்டளையிட்டிருந்தபடியே அவர்கள் செய்தார்கள்.
அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தில் தங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளைக் காவல் காக்கத் தங்கள் சகோகரருக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால், குருக்களைச் சார்ந்த திருப்பணிச் சடங்குகளை அவர்கள் கண்டிப்பாய்ச் செய்யலாகாது. இப்படி, லேவியர் செய்ய வேண்டிய வேலையைக் குறித்து நீ திட்டம் செய்யக் கடவாய் என்றார்.