(அந்தக் கணக்கிலே) உடன்படிக்கைக் கூடாரத்தில் இருக்கவும் வேலை செய்யவும் புகத்தக்கவர்களாய், முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ண வேண்டும்.
அதன் மீது சிவப்பு நிறத் துப்பட்டியை விரித்து, மறுபடியும் அதை ஊதா நிறத் தோல் துப்பட்டியால் மூடி, பின்பு தண்டுகளைப் பாய்ச்சி வேறொரு இளநீலத் துப்பட்டியை எடுத்துக் குத்து விளக்குத் தண்டையும்,
அதனோடு கூட வழிபாட்டுக்கு வேண்டிய தீச்சட்டிகள் முள்ளுகள், திரிசூலங்கள், கொளுவி, துடுப்பு முதலிய பாத்திரங்களை வைத்து, ஊதா நிறத் தோலால் மூடித் தண்டுகளையும் பாய்ச்சுவார்கள்.
பாளையம் பெயர்தலின்போது ஆரோனும் அவன் மக்களும் மூலத்தானத்தையும் அதைச் சார்ந்த யாவற்றையும் மூடி முடித்தவுடனே ககாத் புதல்வர்கள் அவைகளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு வரக்கடவார்கள். அவர்கள் புனித இடத்திலுள்ள பொருட்களை மூடிய வண்ணமாய் எடுப்பார்களேயல்லாது, அவற்றைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பொறுத்த மட்டில் அதுவே அவர்களுடைய கடமை.
தலைமைக் குருவாகிய ஆரோனின் மகன் எலெயஸார் ககாத் புதல்வர்களுக்குத் தலைவன். அவன் அகல்களுக்கு வேண்டிய எண்ணெயையும், நறுமணத் தூப வகைகளையும், நாள்தோறும் இடவேண்டிய பலியையும், அபிசேகத் தைலத்தையும், உறைவிடத்து வழிபாட்டுக்கு வேண்டிய யாவையும், மூலத்தானத்திலுள்ள எல்லாப் பொருட்களையும் கவனிக்கக் கடவான் என்றருளினார்.
அவர்கள் பரிசுத்தத்திலும் பரிசுத்த மானத்தைத் தொட்டால் சாவார்கள். அவர்கள் சாகாமல் பிழைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியதாவது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே போய், அவனவன் செய்ய வேண்டிய வேலைகளையும் சுமக்க வேண்டிய சுமையையும் தனித்தனியாய் நியமித்துப் பங்கிடக் கடவார்கள்.
முப்பது முதல் ஐம்பது வயது வரையிலுமுள்ள எல்லாரையும் எண்ணி, உடன்படிக்கைக் கூடாரத்திற் புகுந்து ஊழியம் செய்யக் கூடியவர்கள் இத்தனை பேரென்று கணக்கெடுப்பாய்.
உடன்படிக்கைக் கூடாரத்தில் இவற்றையெல்லாம் ஜேற்சோன் புதல்வர் அவனவன் தான் எந்தச் சுமையை எடுக்க வேண்டும் என்பதை ஆரோன், அவன் புதல்வர்களின் கட்டளையால் அறியக்கடவார்கள்.
முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் (கூடாரத்துக்கடுத்த) ஊழியத்திற்காகவும் வழிபாட்டுக்காகவும் செல்வோர் அனைவரையும் எண்ணிப் பார்க்கக்கடவாய்.
மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், அவற்றின் கயிறுகள். இவற்றோடு தத்தம் முறைப்படி எல்லாத் தட்டுமுட்டுக்களையும் சுமந்து கொண்டு போவார்கள்.
லேவியர்களிலே அவரவர் தத்தம் முன்னோர்களின் வீட்டு வம்சங்களின்படி மோயீசனாலும் ஆரோனாலும் இஸ்ராயேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டு, மோயீசனாலே பெயர் பெயராக எழுதப்பட்டார்கள்.
ஆண்டவருடைய கட்டளையின்படியே அவர்கள் தத்தம் பணிகளுக்கென்றும், சமைகளுக்கென்றும் எண்ணப்பட்டார்கள். அவ்வாறு செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.