இவ்வாறிருக்க, சூசையின் வம்ச வழியைச் சேர்ந்த மனாஸேயின் மகனான மக்கீரின் புதல்வர்களும், கலாத் வம்சங்களின் அதிபதிகளும் வந்து, இஸ்ராயேல் தலைவர்களின் முன்னிலையில் மோயீசனிடம் சொன்னதாவது:
சீட்டுப் போட்டு இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டைச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்குமாறு எங்கள் தலைவராகிய உமக்குத் தானே ஆண்டவர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய உரிமைப் பாகத்தை அவன் புதல்வியருக்குத் தரக் கட்டளையிட்டார்?
ஆனால், வேறொரு கோத்திரத்து ஆடவர்கள் அவர்களை மணந்து கொள்வார்களாயின், அந்தப் புதல்வியருடைய உரிமைப் பாகம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்களுடைய உரிமை நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் உரிமையோடு சேர்ந்து போகும்.
ஆதலால் ஆண்டவர் சல்பாதின் புதல்வியாரைக் குறித்து விதிக்கிற கட்டளை என்னவென்றால்: அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடவரை மணந்து கொள்ளலாம். ஆனால், தஙகள் கோத்திரத்தாரோடு மட்டுமே அவர்கள் மணம் செய்து கொள்ள வேண்டும்.
ஆதலால், ஆடவர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வம்சத்திலும் மட்டுமே மணம் செய்து கொள்ளவும், அவரவருடைய உரிமைப்பாகம் அவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய்ப் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மட்டும் வாழ்க்கைப்படவும் கடவார்கள்.
இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.