Indian Language Bible Word Collections
Numbers 33:41
Numbers Chapters
Numbers 33 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Numbers Chapters
Numbers 33 Verses
1
இஸ்ராயேல் மக்கள் மோயீசன் ஆரோன் என்பவர்களுடைய தலைமையின்கீழ் எகிப்தினின்று அணியணியாய்ப் புறப்பட்ட பின்னர், அவர்கள் வழியிலே தங்கிய இடங்களின் விவராமவது:
2
ஆண்டவர் கட்டளைபடியே இஸ்ராயேலர் ஓரிடத்தைவிட்டு வேறிடத்திற்குப் போய்ப் பாளையம் இறங்குவார்கள். அந்த இடங்களின் வரிசைப்படியே மோயீசன் அவற்றை எழுதிவைத்தார்.
3
எவ்வாறென்றால்: முதல் மாதத்தின் பதினைந்தாம்நாள் பாஸ்காவுக்கு மறுநாள் (ஆண்டவருடைய) வலுத்த கையாலே அவர்கள் இராமசேஸை விட்டுப் புறப்பட்டார்கள். எகிப்தியர் எல்லாரும் அதைப்பார்த்துக்கொண்டு,
4
ஆண்டவர் அழித்திருந்த தங்கள் தலைப்பிள்ளைகளை அடக்கம் செய்து கொண்டு இருந்தனர். (உள்ளபடி அவர்களுடைய தேவர்கள் மீதும் ஆண்டவர் தம்முடைய நீதியைச் செலுத்திப் பழிவாங்கியிருந்தார்).
5
இஸ்ராயேலர் சொக்கோட்டிலே பாளையம் இறங்கினர்.
6
சொக்கோட்டிலிருந்து பாலைவனக் கடை யெல்லைகளிலுள்ள எத்தாமைச் சேர்ந்தனர்.
7
அங்கிருந்து புறப்பட்டுப் பேர்செபோனை நோக்கிய பியயிரோட் பக்கத்தில் வந்து, மக்தலோமுக்கு முன்பாகப் பாளையம் இறங்கினர்.
8
பியயிரோட்டிலேயிருந்து புறப்பட்டுக் கடல்வழியாய்ப் பாலைவனத்திற்குப் போய், எத்தாம் என்னும் பாலைவனத்திலே மூன்று நாள் நடந்து, மாராவிலே பாளையம் இறங்கினர்.
9
மாராவிலே புறப்பட்டுப் பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பனைமரங்களும் இருந்த எலீமில் பாளையம் இறங்கினர்.
10
அங்கேயிருந்து புறப்பட்டுச் செங்கடல் அருகே கூடாரம் அடித்தனர். செங்கடற் கரையிலிருந்து புறப்பட்டுப் போய்,
11
சின் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.
12
அங்கேயிருந்து புறப்பட்டுத் தப்கா சேர்ந்தனர்.
13
தப்காவிலிருந்து புறப்பட்டு அலூஸிலே பாளையம் இறங்கினர்.
14
அலூஸிலிருந்து புறப்பட்டு இரப்பீதிமிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர். அங்கே மக்களுக்குக் குடிதண்ணீர் இல்லாது போயிற்று.
15
இரப்பீதிமிலேயிருந்து புறப்பட்டு அவர்கள் சீனாய் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.
16
சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு இச்சைகோரி போய்ச்சேர்ந்தனர்.
17
இச்சை கோரியை விட்டுப்புறப்பட்டு ஆசெரோட்டிலே பாளையம் இறங்கினர்.
18
ஆசெரோட்டிலேயிருந்து ரெத்மா போய்ச் சேர்ந்தனர்.
19
ரெத்மாவிலெயிருந்து புறப்பட்டு ரெம்மோம் பாரேஸிலே பாளையம் இறங்கினர்.
20
அங்கேயிருந்து புறப்பட்டு லெப்னாவிலே போய்ச் சேர்ந்தனர்.
21
லெப்னாவிலேயிருந்தோ ரேஸாவிலே பாளையம் இறங்கினர்.
22
ரேஸாவிலேயிருந்து புறப்பட்டுக் கேலத்தா போய்ச் சேர்ந்தனர்.
23
அங்கேயிருந்து செப்பேர் மலையின் அண்மையில் பாளையம் இறங்கினர்.
24
செப்பேர் மலையை விட்டுப் புறப்பட்டு அரதா போய்ச் சேர்ந்தனர்.
25
அங்கேயிருந்து புறப்பட்டு மக்கெலோத்திலே பாளையம் இறங்கினர்.
26
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுத் தாகாத் போய்ச்சேர்ந்தனர்.
27
தாகாத்திலேயிருந்து தாரேயிலே பாளையம் இறங்கினர்.
28
அங்கேயிருந்து புறப்பட்டு மெத்காவிலே கூடாரங்களை அடித்தனர்.
29
மெத்காவிலேயிருந்தோ எஸ்மொனாவிலே பாளையம் இறங்கினர்.
30
எஸ்மொனாவிலிருந்து புறப்பட்டு மொசெரோத் போய்ச் சேர்ந்தனர்.
31
மொசெரோத்திலேயிருந்து பெனஜாக்கனிலே பாளையம் இறங்கினர்.
32
பெனஜாகனிலேயிருந்து புறப்பட்டுக் காத்காத் மலை போய்ச் சேர்ந்தனர்.
33
அங்கேயிருந்து புறப்பட்டு ஜெத்தேபத்தாவிலே பாளையம் இறங்கினர்.
34
ஜெத்தேபத்தாவிலிருந்து எபிரோனா போய்ச் சேர்ந்தனர்.
35
எபிரோனாவிலிருந்து புறப்பட்டு அஸியோங்கபேரிலே பாளையம் இறங்கினர்.
36
அங்யேயிருந்து புறப்பட்டு காதேஸ் என்னப்பட்ட சின் பாலைவனம் போய்ச்சேர்ந்தனர்.
37
காதேஸிலிருந்து புறப்பட்டு ஏதோமின் கடையெல்லைகளிலுள்ள ஓர் என்னும் மலையடியிலே பாளையம் இறங்கினர்.
38
தலைமைக் குருவாகிய ஆரோன் ஆண்டவருடைய கட்டளையின் படி ஓர் என்னும் மலையில் ஏறி அங்கேயே இறந்தார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தினின்று புறப்பட்ட நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதல் நாளிலே அவர் இறந்தார்.
39
அப்பொழுது அவருக்கு வயது நூற்றிருபத்துமூன்று.
40
அப்பொழுது தென்னாட்டிலே குடியிருந்த கானானையனான அராத் என்னும் அரசன் இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டில் புகுந்துள்ளதைக் கேள்விப்பட்டான்.
41
நிற்க, இஸ்ராயேலர் ஓர் என்னும் மலையிலிருந்து புறப்பட்டுச் சல்மோனாவிலே பாளையம் இறங்கினர்.
42
அங்கேயிருந்து புறப்பட்டுப் புனோன் போய்ச் சேர்ந்தனர்.
43
புனோனை விட்டுப் புறப்பட்டு ஒதோத்திலே பாளையம் இறங்கினர்.
44
ஒதோத்திலேயிருந்து மோவாபியரின் எல்லையாகிய இயபாரிம் போய்ச் சேர்ந்தனர்.
45
இயபாரிமிலேயிருந்து புறப்பட்டுத் திபொங்காதிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர்.
46
அங்கேயிருந்து புறப்பட்டு எல்மொண்டெப்லத்தாயீமிலே பாளையம் இறங்கினர்.
47
எல்மொண்டெப்லத்தாயீமிலிருந்து புறப்பட்டு நபோவுக்கு எதிரேயுள்ள அபரீம் மலைகளுக்குப் போனார்கள்.
48
அபரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு அவர்கள் எரிக்கோ நகரத்ருக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையிலுள்ள மோவாபிய வெளிகளில் போய்ச் சேர்ந்தனர்.
49
அங்கு மோவாபியருடைய சமவெளிகளிலே பெத்ஸிமோத்திலிருந்து ஆபேற்சத்தீம் வரையிலும் பாளையம் இறங்களினர்.
50
அவ்விடத்திலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
51
நீ இஸ்ராயேல் மக்களிடம் கட்டளையாய்ச் சொல்லவேண்டியது ஏதென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேரும் போது,
52
அந்நாட்டுக் குடிகளையெல்லாம் அழித்து, அவர்களுடைய ஆலயங்களை அழித்து, அவர்களுடைய விக்கிரகங்களை உடைத்து, மேட்டுக் கோவில்களையெல்லாம் பாழாக்கி விடுங்கள்.
53
இப்படி அந்நாட்டைப் புனிதப்படுத்தி அதில் குடியேறக்கடவீர்கள். அந்த நாட்டை உங்களுக்கு நாமே உடைமையாகக் கொடுத்தோம்.
54
திருவுளச்சீட்டுப் போட்டு நாட்டைப் பங்கிட்டு, அதிகமான மக்களுக்கு அதிக உரிமையும், கொஞ்சமான மக்களுக்கு கொஞ்சம் உரிமையும் கொடுப்பீர்கள். அவரவர்க்குச் சீட்டு எப்படி விழுமோ அப்படி அவரவர்க்கு அவ்விடம் உரியதாகும். உங்கள் கோத்திரங்களின்படியும் குடும்பங்களின்படியும் உரிமை பெற்றுக்கொள்வீர்கள்.
55
நீங்கள் நாட்டின் குடிகளைக் கொலைசெய்யாது விடுவீர்களாயின், மீதியாய் இருப்பவர்கள் உங்கள் கண்களில் ஆணிகளைப் போலவும் விலாக்களில் வேல்களைப் போலவும் இருப்பார்கள்; நீங்கள் குடியிருக்கும் நாட்டிலே உங்களைத் துண்புறுத்திவருவார்கள்.
56
அப்படி விட்டால் நாம் எவ்விதப் பீடை அவர்களுக்குச் செய்ய இருந்தோமோ அவையெல்லாம் உங்களுக்கே செய்வோம் என்றருளினார்.