அன்றியும், இஸ்ராயேலர் அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்து, எல்லா மந்தைகளையும் தட்டுமுட்டுகளையும் மற்றுமுள்ள சொத்துக்கள் யாவையும் கொள்ளையிட்டு,
இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும், இஸ்ராயேல் மக்களாகிய சபையார் அனைவருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால், தங்களுக்கு உபயோகமாயிருக்கக்கூடிய மற்றப் பொருட்களையெல்லாம் எரிக்கோவுக்கு எதிரேயுள்ள யோர்தானுக்கு அண்மையிலே மோவாபிய வெளிகளில் இருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள்.
பொகோர் வழிபாட்டுப் பாவச் செயலிலே பாலாமின் அறிவுரையைக் கேட்டு இஸ்ராயேல் மக்களை வஞ்சித்து, ஆண்டவருக்கு விரோதமாய் நீங்கள் துரோகம் செய்ய, ஏதுவாய் இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப்பற்றித்தானே சபையார் ஆண்டவரால் வதைக்கப்பட்டார்கள்?
பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்கவேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் துய்மைப்படுத்தப்படுவான்.
அவ்வாறே கொள்ளையிடப்பட்டவைகளில் எல்லா ஆடைகளையும் தட்டுமுட்டுகளையும், வெள்ளாட்டுத் தோலாலேனும் மயிராலேனும் மரத்தாலேனும் செய்யப்பட்ட கருவி முதலிய பொருட்களையும் தூய்மைப்படுத்தக் கடவீர்கள் என்றார்.
அன்றியும், போருக்குச் சென்ற படைவீரர்களின் பங்கிலே ஆண்டவருடைய பங்கை எடுக்கக்கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐநூற்றுக்கு ஒன்றாம்.
இஸ்ராயேல் மக்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐம்பதுக்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளை ஆண்டவரின் உறைவிடத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாய் என்றருளினார்.
இஸ்ராயேல் மக்கள் கொள்ளையிட்ட எல்லாப் பொருட்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டார். எலெயஸாருக்கு அவர் கொடுத்த பகுதி போர் வீரர்களைச் சேர்ந்த சரிபாதியில்தான் எடுக்கப்பட்டது.
மோயீசன் அவற்றில் ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, ஆண்டவருடைய உறைவிடத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான்.
அவர்களில் ஒருவனும் குறைவில்லை. எனவே, நீர் எங்களுக்காக ஆண்டவரை வேண்டி கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட காலணிகளும் கையணிகளும் கணையாழிகளும் காதணிகளும் முத்துமாலைகளும் போன்ற பொன்னணிகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள்.
இவ்வாறு ஆயிரவர்க்கும் நூற்றுவர்க்கும் தலைவர்களாய் இருந்தவர்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்து எழுநூற்றைம்பது சீக்கல் நிறை இருந்தது.
மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவருடைய முன்னிலையில் இஸ்ராயேல் மக்களின் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்து வைத்தார்கள்.