எங்கள் தந்தையார் பாலைவனத்தில் இறந்து போனார். கொறே என்பவனால் ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்லர். ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குப் புதல்வர் இல்லை. அவருக்கு ஆண்மக்கள் இல்லாததினாலே அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்கு மரபுரிமை கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள்.
சல்பாதுடைய புதல்விகள் கேட்கிறது நியாயமானதே. அவர்களுக்கு அவர்கள் தந்தையின் குடும்பத்தாருக்குள்ளே உரிமை கொடுக்க வேண்டியதுமன்றி, அவன் இறந்து, விட்டுச்சென்ற சொத்துக்கு அவர்களே உரிமையாளராகும்படி செய்வாயாக.
அவன் தந்தைக்குச் சகோதரர் இல்லையாயின், அவன் சுற்றத்தாரில் அவனுக்கு எவன் மிக நெருங்கிய உறவுமுறையானாய் இருப்பானோ அவனுக்கே கிடைக்கும். இது ஆண்டவர் மோயீசனுக்குக் கொடுத்தபடி இஸ்ராயேல் மக்களுக்குப் புனிதமும் நித்தியமுமான நீதிச் சட்டமாய் இருக்கும் என்றார்.
ஏனென்றால், சீன் பாலைவனத்திலே சபையார் வாக்குவாதம் செய்தபோது, தண்ணீருக்கடுத்த காரியத்திலே நீங்கள் இருவரும் அவர்கள் முன்பாக நம் புனிதத்தைப் பேணாமல் இருந்தீர்கள். இது சீன் பாலைவனத்திலே காதேஸ் ஊருக்கு அருகிலுள்ள வாக்குவாதத் தண்ணீர் என்றார்.
புறப்படுங்கள். திரும்பி வாருங்கள் என்று கட்டளையிடவும், உடலுள்ள யாவருடைய ஆவிகளுக்கும் கடவுளாகிய ஆண்டவர் ஓர் ஆடவனைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்குத் தலைவனாக நியமிக்கக்கடவீர் என்று மறுமொழி சொன்னார்.
இஸ்ராயேல் மக்களாகிய சபையார் எல்லாரும் அவன் சொற்படி கேட்டு நடக்கும் பொருட்டு நீ எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக அவனுக்கு (வேண்டிய) கட்டளைகளைக் கொடுத்து, உன் மகிமையின் ஒரு பாகத்தையும் அவனுக்குத் தருவாய்.
அவன் எதையேனும் செய்யவேண்டி இருக்கும்போது, குருவாகிய எலேயஸார் அக்காரியத்தைக் குறித்து ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளக்கடவான். அவனுடைய கட்டளையின்படியே யோசுவாவும், அவனோடு இஸ்ராயேல் மக்களும், சபையார் அனைவரும் போகவும் வரவும்கடவார்கள் என்றார்.