Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 24 Verses

1 இஸ்ராயேலருக்கு ஆசீர் அளிப்பது ஆண்டவருக்கு விருப்பமென்று பாலாம் கண்டு, முன் செய்ததுபோல் சகுனம் பார்க்கப் போகாமல், பாலைவனத்திற்கு நேராகத் தன் முகத்தைக் திருப்பி,
2 கண்களை ஏறெடுக்கவே, இஸ்ராயேலர் தங்கள் கோத்திரங்களின்படியே பாளையம் இறங்கியிருக்கக் கண்டான். அந்நேரம் கடவுளால் ஏவப்பட்டவனாய் அவன் இறைவாக்குரைக்கலானான்.
3 எப்படியென்றால்: பேயோரின் புதல்வனாகிய பாலாம் உரைத்த வார்த்தை; இருண்ட கண்ணையுடையவன் பகர்ந்த வாக்கியம்;
4 கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, எல்லாம் வல்லவரின் தரிசனத்தைக் கண்டு மயங்கிக் கீழே விழுந்தபின் கண்பார்வை பெற்றவன் சொல்வதாவது:
5 யாக்கோபே, உன் திரைக் கூடாரங்கள் எவ்வளவோ அழகானவை! இஸ்ராயேலே, உன் கூடாரங்கள் எவ்வளவு அலங்காரமாய் இருக்கின்றன!
6 அவைகள் செடிகொடி மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் போலும், நதியோரத்திலுள்ள சிங்காரவனங்களைப் போலும், ஆண்டவர் வைத்த வாசனை மரங்களைப் போலும், நீரருகே வளர்கின்ற கேதுரு மரங்களைப் போலும் இருக்கின்றன.
7 அவனுடைய நீர்ச்சாலினின்று தண்ணீர் பாய்ந்தோடும். அவன் குலம் பெருவெள்ளம் போலப் பரவும். அவனுடைய அரசன் ஆகாகைக் காட்டிலும் உயர்ந்தவனாய் இருப்பான். ஆகாகின் ஆட்சியை அவனிடமிருந்து பறித்துக்கொள்வான்.
8 அவன் காண்டாமிருகத்துக்கு நிகரான வலிமையுடையவனாய், அவனை ஆண்டவர் எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர்கள் தங்கள் பகைவர் இனத்தை அழித்து, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளால் எய்வார்கள்.
9 அவன் பதுங்கும் சிங்கம் போலும், யாரும் எழுப்பத் துணியாத பெண்சிங்கம் போலும் படுத்துறங்குவான். உனக்கு ஆசீர் அளிப்பவன் ஆசீர் பெறுவான்; உன்னை சபிப்பவன் சாபத்துக்கு உள்ளாவான் என்று எண்ணப்படுவான் என்றான்.
10 அப்பொழுது பாலாக் பாலாமின் மீது மனம் குமுறிக் கைதட்டி: உன் பகைவர்களைச் சபிக்க வேண்டுமென்று நான் உம்மை அழைத்திருக்க, நீர் மூன்று முறையும் அவர்களுக்கு ஆசீர் அளித்தீரே!
11 உம் இடத்திற்குத் திரும்பிப்போம்! உம்மை மிகுதியாய் மகிமைப்படுத்தத் தீர்மானித்திருந்தேன்; ஆனால் நீர் அந்தப் பெரும் பேறுபெறாதபடிக்கு ஆண்டவரே தடுத்துள்ளார் என்றான்.
12 அதற்கு பாலாம்: நீர் என்னிடம் அனுப்பின பிரதிநிதிகளுக்கு நான் என்ன சொன்னேன்?
13 பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், என் விருப்பப்படி நன்மையேனும் தீமையேனும் வருவிக்க என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையை மீற என்னாலே கூடாது என்றும், ஆண்டவர் சொல்லிய எல்லாவற்றையும் சொல்வேன் என்றும் நான் சொன்னேனன்றோ? ஆயினும்,
14 நான் இதோ என் மக்களிடம் போய், பிற்காலத்திலே உமது மக்கள் அந்த மக்களுக்கு இன்னின்னது செய்யலாம் என்பதைக்குறித்து உமக்குத் தெரிவிப்பேன் என்றான்.
15 பாலாம் மறுபடியும் இறைவாக்குரைக்கத் தொடங்கினான். எப்படியென்றால்: பேயோரின் புதல்வன் பாலாம் பேசினான்; எவனுடைய கண் மூடியிருந்ததோ அவன் உரைத்தான்;
16 கடவுளின் வார்த்தைகளையும் கேட்டு, உன் உத்தம (கடவுளின்) உண்மையையும் அறிந்து, எல்லாம் வல்லவரின் தரிசனத்தையும் கண்டு, மயங்கிக் கீழே விழுந்து கண் பார்வை பெற்ற நான் அவரைக் காண்பேன்;
17 ஆனால், இப்போதல்ல. அவரைத் தரிசிப்பேன்; ஆனால், அண்மையில் அல்ல. யாக்கோபிலிருந்து ஒரு விண்மீன் உதிக்கும். இஸ்ராயேலரிடமிருந்து ஒரு செங்கோல் எழும்பும். அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும். சேத் புதல்வர்கள் எல்லாரையும் அழித்தொழிக்கும்.
18 ஏதோம் நாடு அதன் வசமாகும். செயீரின் உடமை பகைவர்களின் உரிமையாகும். இஸ்ராயேல் பேராற்றல் பெற்று விளங்கும்.
19 எவர் ஆட்சி செய்து, நகரத்தில் எஞ்சியிருப்பதைத் தோன்றுவார் என்றான்.
20 மேலும் அவன் அமலேக்கைக் கண்டு: அமலேக் மக்களினத்தில் முதலோன்; அவன் முடிவிலே முற்றும் அழிவான் என்று இறைவாக்குரைத்தான்.
21 அப்பால் சீனையனையும் கண்டு அவன் இறைவாக்காய்: உன் உறைவிடம் அரண் சூழ்ந்த உறைவிடம். ஆயினும், நீ உன் கூட்டைப் பாறையின் மேல் கட்டியிருந்தாலும்,
22 சீன் சந்ததியில் நீ தலைவனாயிருந்தாலும் எத்தனை நாள் வரையிலும் நிலை நிற்பாய்? ஆசூர் உன்னைச் சிறைப்படுத்தப் போகிறான் என்றான்.
23 மறுபடியும் அவன் வாயைத் திறந்து: ஐயோ, கடவுள் இதைச்செய்யும் போது எவன்தான் பிழைப்பான்?
24 இத்தாலி நாட்டிலிருந்த மூன்று அணிவகுப்புப் படை வீரர்கள் கப்பல்களில் ஏறி வருவார்கள். அவர்கள் அசீரியரைத் தோற்கடிப்பார்கள்; எபிரேயரைப் பாழாக்குவார்கள்; இறுதியில் தாங்களும் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றான்.
25 பாலாம் இதைச்சொல்லி முடித்து, எழுந்து தன் இடத்திற்குத் திரும்பினான். பாலாக்கும் தான் வந்த வழியே திரும்பிப் போனான்.
×

Alert

×