அவைகள் செடிகொடி மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் போலும், நதியோரத்திலுள்ள சிங்காரவனங்களைப் போலும், ஆண்டவர் வைத்த வாசனை மரங்களைப் போலும், நீரருகே வளர்கின்ற கேதுரு மரங்களைப் போலும் இருக்கின்றன.
அவனுடைய நீர்ச்சாலினின்று தண்ணீர் பாய்ந்தோடும். அவன் குலம் பெருவெள்ளம் போலப் பரவும். அவனுடைய அரசன் ஆகாகைக் காட்டிலும் உயர்ந்தவனாய் இருப்பான். ஆகாகின் ஆட்சியை அவனிடமிருந்து பறித்துக்கொள்வான்.
அவன் காண்டாமிருகத்துக்கு நிகரான வலிமையுடையவனாய், அவனை ஆண்டவர் எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர்கள் தங்கள் பகைவர் இனத்தை அழித்து, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளால் எய்வார்கள்.
அப்பொழுது பாலாக் பாலாமின் மீது மனம் குமுறிக் கைதட்டி: உன் பகைவர்களைச் சபிக்க வேண்டுமென்று நான் உம்மை அழைத்திருக்க, நீர் மூன்று முறையும் அவர்களுக்கு ஆசீர் அளித்தீரே!
உம் இடத்திற்குத் திரும்பிப்போம்! உம்மை மிகுதியாய் மகிமைப்படுத்தத் தீர்மானித்திருந்தேன்; ஆனால் நீர் அந்தப் பெரும் பேறுபெறாதபடிக்கு ஆண்டவரே தடுத்துள்ளார் என்றான்.
பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், என் விருப்பப்படி நன்மையேனும் தீமையேனும் வருவிக்க என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையை மீற என்னாலே கூடாது என்றும், ஆண்டவர் சொல்லிய எல்லாவற்றையும் சொல்வேன் என்றும் நான் சொன்னேனன்றோ? ஆயினும்,
கடவுளின் வார்த்தைகளையும் கேட்டு, உன் உத்தம (கடவுளின்) உண்மையையும் அறிந்து, எல்லாம் வல்லவரின் தரிசனத்தையும் கண்டு, மயங்கிக் கீழே விழுந்து கண் பார்வை பெற்ற நான் அவரைக் காண்பேன்;
ஆனால், இப்போதல்ல. அவரைத் தரிசிப்பேன்; ஆனால், அண்மையில் அல்ல. யாக்கோபிலிருந்து ஒரு விண்மீன் உதிக்கும். இஸ்ராயேலரிடமிருந்து ஒரு செங்கோல் எழும்பும். அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும். சேத் புதல்வர்கள் எல்லாரையும் அழித்தொழிக்கும்.
இத்தாலி நாட்டிலிருந்த மூன்று அணிவகுப்புப் படை வீரர்கள் கப்பல்களில் ஏறி வருவார்கள். அவர்கள் அசீரியரைத் தோற்கடிப்பார்கள்; எபிரேயரைப் பாழாக்குவார்கள்; இறுதியில் தாங்களும் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றான்.