ஆண்டவருக்குச் சிறப்பு நேர்ச்சையாவது உற்சாகத்தானமாவது நேர்ந்து முழுத் தகனப் பலியையேனும் மற்ற யாதொரு பலியையேனும், அல்லது உங்கள் பண்டிகைகளில் மாட்டையும் ஆட்டையும் கொண்டு ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப் பலியையேனும் நீங்கள் செலுத்த வரும்போது,
மிருகப் பலியை எவன் கொண்டு வந்தானோ அவன் கின் என்னும் படியிலே காற்படி எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவைக் கூடவே ஒப்புக் கொடுப்பான். மெல்லிய மாவு எவ்வளவென்றால், ஏப்பி என்னும் மரக்காலில் பத்திலொரு பங்கேயாம்.
அன்றியும், முழுத்தகனம் முதலிய பலிகளுக்காக பானப்பலிக்கென்று கின் என்னும் அளவிலே நான்கில் ஒரு பங்கு கொடிமுந்திரி பழச் சாற்றையும் ஆட்டுக் குட்டியையும் அவன் கொண்டு வருவான்.
ஒரு வேளை ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியவற்றிலும், அவர் மோயீசன் மூலமாய் உங்களுக்குக் கட்டளையிடத் தொடங்கின துவக்கத்திலும் பிற்காலத்திலும் அறிவித்தவற்றிலும் நீங்கள் அறியாமையினாலே எதையாவது மீறி நடந்திருப்பீர்களாயின்,
குரு இஸ்ராயேல் மக்களின் முழுச் சபைக்காகப் பிரார்த்திப்பார். அப்பொழுது அவர்களுடைய குற்றம் மன்னிக்கப்படும். ஏனென்றால், அது அறியாமையினால் செய்யப்பட்டதாகும். ஆயினும், அவர்கள் தங்களுக்காகவும், அறியாமல் செய்த தங்கள் குற்றத்திற்காகவும் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலியைஒப்புக் கொடுக்ககடவார்கள்.
(அந்த குற்றம்) அறியாமையினால் எல்லா மக்களுக்கும் வந்ததாகையால், அது இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அவர்கள் நடுவில் குடியிருக்க வந்த அந்நியருக்கும் மன்னிக்கப்படும்.
ஆனால், எவனேனும் அகந்தையினாலே யாதொரு பாவத்தைத் துணிந்து செய்தால், அவன் - உள் நாட்டவனாயினும்வெளி நாட்டவனாயினும் - (ஆண்டவருக்குத் துரோகியானதினாலே) தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: அம்மனிதன் நிச்சயமாய்ச் சாகக்கடவான். மக்கள் எல்லாரும் அவனைப் பாளையத்தின் புறம்பே கொண்டு போய்க் கல்லாலெறியக் கடவார்கள் என்றார்.
(இதன் நோக்கம் என்னவென்றால்) அவர்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம், பலவற்றை இச்சிக்கும் விபசாரரைப் போன்ற தங்கள் மன நாட்டங்களையும் கண்களை மருட்டும் தோற்றங்களையும்பின்பற்றிப் போகாமல், தாங்கள் ஆண்டவருடைய கட்டளைகளையும்,