(19) அந்த நாடு எப்படிப்படட் தென்று நன்றாய்ப் பாருங்கள். அதில் குடியிருக்கிறவர்கள் எவ்வித மக்கள், வலிமைமிக்கவரோ, வலிமை குன்றியவரோ குடிகள் சிலரோ பலரோ என்றும்
(21) நிலத்தின் தன்மை வளப்பமோ இளப்பமோ, மரங்கள் பல உண்டோ இல்லையோ என்றும் நுணுக்கமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். துணிவு கொள்ளுங்கள். நாட்டின் காய்கனிகளிலும் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். அக்காலமோ கொடி முந்திரி முதற்பழங்கள் பழுக்கும்காலமாய் இருந்தது.
(23) தெற்கே திரும்பிச் சென்று எபிரோன் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே எனாத்தின் புதல்வராகிய அக்கிமான், சீஸா, தால்மயி என்பவர்கள் இருந்தார்கள். ஏனென்றால், எபிரோன் எகிப்திலுள்ள தனிம் என்னும் நகருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தது.
(24) பின்பு அவர்கள் கொடிமுந்திரிக்குலை என்னும் ஆறு வரையிலும் போய், ஒரு கொடிமுந்திரிச் செடியில் ஒரு கிளையும் அக்கிளையோடு ஒரு குலையையும் அறுத்து, அதை இருவர் ஒரு தண்டில் கட்டி எடுத்து வந்தார்கள். அவ்விடத்திலுள்ள மாதுளம்பழங்களிலும் சீமை அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள்.
(27) காரேஸில் இருக்கும் பாரான் பாலைவனத்திற்கு வந்து மோயீசன், ஆரோன் மற்றுமுள்ள இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் பார்த்து, அவர்களோடும் மக்களோடும் பேசிக்கொண்டே நாட்டின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
(31) அப்பொழுது மோயீசனுக்கு எதிராக மக்கள் முறுமுறுத்துப் பேசுவதைக் காலேப் கேட்டு, அவர்களை அமைதிப்படுத்தத் தக்கதாக: நாம் உடனே போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம். எளிதாக அதைப் பிடித்துக் கொள்ளலாம் என்றான்.
(34) அங்கே நாங்கள் கண்ட எனாக்கின் குலத்தாரில் சிலர் எங்குமில்லாத அரக்கராய் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக் கிளிகளைப்போல் இருந்தோம் என்றார்கள்.