பாளையம் பெயரும்படி சபையை வரவழைப்பதற்கு உபயோகிக்க இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்து கொள்வாய். அவை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும்.
எக்காளத்தின் இரண்டாவது தொனி, முதல் தொனியைப்போல் இருந்தால், தெற்கே இறங்கியிருக்கிறவர்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்ப்பார்கள். இப்படி எக்காளங்கள் முழங்க முழங்க மற்றுமுள்ள பாளையங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படக்கடவன.
உங்களை விரோதிக்கிற பகைவர்களோடு போராட உங்கள் நாட்டினின்று புறப்படுகையில், நீங்கள் எக்காளத்தைப் பெருந்தொனியாய் ஊதுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பார்.
உங்கள் விருந்துகளிலும், திருநாட்களிலும், மாதத்தின் முதல் நாள் என்றும் நீங்கள் சமாதானப் பலி, முழுத் தகனப் பலிகள் முதலியன செலுத்தும்போது கடவுள் உங்களை நினைவுகூரும்படியாய் எக்காளங்களை முழக்கக்கடவீர்கள். நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
அப்போது ககாத்தியர் புனித மூலத்தானத்தைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். புனித கூடாரம் எவ்விடத்தில் நிறுவப்படுமோ அவ்விடம் சேருமட்டும் அவர்கள் அதைச் சுமந்து போவார்கள்.
எல்லாப் படைகளுக்கும் கடைசிப் படையாகிய தான் கோத்திரத்தார் மற்றவர்களுக்குப் பின் தத்தம்அணி வரிசைப்படி பயணமானார்கள். அவர்களுக்கு அமிசதாய் புதல்வன் ஐயேசர் தலைவனாய் இருந்தான்.
அப்பொழுது மோயீசன் தம் மாமனாகிய இராகுவேல் என்னும் மதியானியனுடைய புதல்வனான ஓபாப் என்பவனை நோக்கி: கடவுள் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போகிறோம். நீயும் எங்களோடு கூட வந்தால் உனக்கு நன்மை செய்வோம். ஆண்டவர் இஸ்ராயேலருக்கு நல்ல வாக்குறுதி தந்திருக்கிறார் என்று சொன்னார்.
ஆகையால், அவர்கள் ஆண்டவருடைய மலையை விட்டு மூன்று நாளும் நடந்து போகையில் ஆண்டவருடைய பெட்டகம் முன்னே சென்று, அவர்கள் அம் மூன்று நாளிலும் பாளையம் இறங்கவேண்டிய இடங்களைக் காண்பித்து வந்தது.